பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சனிக்கு மனத்தில் கடுகத்தனை களிப்புக்கூட கண் சிமிட்டவில்லை சாதத்தை அள்ளி, நெய்யும் பருப்பும் பிரிந்து விடாமல் பிசைந்தவள். தலையை அச்சத்தோடும் அயர்வோடும் நிமிர்த்தினாள் : மகேஷ் இன்னமும் கல்லாய்ச் சமைந்திருந்த கோலம் அவளைக் கம்பளிப் புழுவாக அரிக்கவே, ஒரக்கண்ணால் பார்வை வலையை விரித்தாள். ‘ஏன் இப்படி என்னவோ ஒருமாதிரி உட்கார்ந்திருக்கீங்க? சாப்பிடுங்க, மகேஷ், சாப்பிடுங்க,” என்று தயவாக் வேண்டினாள். - -

ரஞ்சனியின் நினைவூட்டலுக்காகவே காத்திருந்தவர் போல, உதடுகளில் சன்னமான முறுவலைப் பின்னப்படாமல் தூவினார்; முதல் கவளச் சோற்றை நொடியில் உருட்டி, நொடியில் வாய்க்குள்ளே போட்டுக்கொண்டார்.

ரஞ்சித் நயமாக மட்டுமல்ல, விநயமாகவும் சிரித்து வைத்தார்: ‘'என்னோட ரஞ்சனி சொன்னால்தான், எங்களோட மகேஷ் கேட்பது வழக்கம். சரி, சரி: வேகம் ஊணு கழியுங்க, மகேஷ் ஸாரே!” சாந்தியைக்காட்டாமல், சலனத்தைக் காட்டிக்கொண்டிருந்த அப்போதைய மனத்தின் நிலையிலே, அந்த அந்திமாலைப் பொழுதின் பயங்கரமான சோகக்கூத்து, விதியின் ஒருநாடகத்தை முடித்த துயரக்கூத்தாக முடிந்திட்ட ஆறாத் துயரம் அப்போதும் அவரை அரிக்கவும் நச்சரிக்கவும் மறந்துவிடவில்லை; ரத்தக் கண்ணீரின் கசிவில் மகேஷ் தேர் முனையிலும் ரஞ்சனி எதிர்முனையிலும் மாறிமாறிச் சுழன்றன : “ஆண்டவனே.-- மனம் அழகிலா விளையாட்டுடையானைப் பிரார்த்தனை செய்தது; ஆனால், பிரார்த்தனைக்கு இரங்கி, ஆண்டவன் இறங்கிவரவில்லை; 'நினைத்தேன்; வந்தாய்' என்கிற கதையாக, பாபு ஓடோடி வந்தான்; தரிசனம் தந்தான். பாபு. நெஞ்சில் பதம் பிடித்துப் பரதம் ஆடிய பாபு, அதோ, நினைவுக்கு உத்தாரம் தருகின்ற பாவனையில், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் - பாபு!... எங்க அருமை

103