பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகனே!” பொட்டுப் பொழுதில், பொடி பட்ட மாதிரி, விழிகள் தளும்பிவிட்டன.

திகில் அடைந்தாள் ரஞ்சனி, ஆசை அத்தானை ---- தன்னுடைய அருமையான உயிருக்கும் பெருமையான மானத்துக்கும் சரித்திரமேன்மை கொண்ட ஒரு கல்வெட்டுத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கும் அன்பு அத்தானைப் பதற்றம் மூள, அப்பதற்றம் நெருப்பாகத் தகிக்க உற்றுப் பார்த்தாள்; உறுத்துப் பார்த்தாள் அவள். அவள் ரஞ்சினி ரஞ்சித்தின் ரஞ்சனி, ரஞ்சித்திற்கே உடைமை பூண்ட ஆசை ரஞ்சனி; அருமை ரஞ்சனி! “அத்தான், சாப்பிடுங்க; வந்திருக்கிற விருந்தாளிகளை அழைச்சுக்கிட்டு, சாயரட்சை எங்கெங்கோ போகணும்னு ‘ப்ரொக்ராம்’ போட்டீங்களே? சல்தி பண்ணிச் சாப்பிடுங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து எழுந்திருச்சதும், காஃபி சாப்பிடலாம்; அப்பறம், வெளியிலே புறப்பட வேணாங்களா? ஊம். சீக்கிரம் சாப்பிடுவீங்களாம்!-நம்ப பாபு மாதிரி நல்ல பிள்ளை ஆச்சே நீங்க! வேணும்னா ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!’ கதை சொல்லட்டுங்களா? ஊம், சரிதான்; சீக்கிரம் சாப்பிடுங்க. அத்தான்; உங்க ஆசைப்படி, நானும் உங்களோடே சரிசமமாய்க் குந்திச் சாப்பிட ஒப்பவீங்களா?...இப்பவும் என் பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து, மரியாதை கொடுத்துச் சாப்பிடுங்களேன், அத்தான்!” மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது; இருதயம் எப்படி அசுரகதியில்-‘டக்டக்’ சத்தத்தை எழுப்பித் தொலைகிறது: பொங்கி வரும் பெரு நிலவாகவும் புன்னகையின் புது நிலவாகவும் அவள் பரிணமிக்கிறாள். ரஞ்சனியின் பொன்நகைப் புன்னகையில் ஸ்ரீரஞ்சனி புன்னகை புரிகிறது.

ரஞ்சித் உயர்ந்தவர்; ஆகவேதான், அவரால் விழிகளை உயர்த்திட முடிந்தது; நேர்கொண்ட பார்வை நேர்க்கோடென விரிந்தது; ரஞ்சனியை ஊடுருவினார்; எம்பெருமானுக்கு உடைய எம்பிராட்டியின் அன்பு விண்ணப்பமாகவே

104