பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சனியின் சொற்களை அவர் வாங்கிக்கொண்டார். நிர்மலமான அந்தக் கோலமதர் விழிகளிலேதான் எத்தனை குழந்தைத்தனம், பிழையற்ற பாவம், பரிவு, பாசம், நேசம்:-ஆஹா!...என் ரஞ்சனி ஆன்போடு கேட்ட எதைத்தான் நான் இதுவரை மறுத்திருக்கிறேன்? அவள் கேட்டு ‘இல்லை!’ என்றேனா?---அல்லது, ‘முடியாது!’ என்று தான் சொன்னது உண்டா? அவள்தான் என் உயிர்; எனக்கு உயிர்; அவளது உயிர்தான் எனது உயிர்!-அவள் அன்பு அப்படி; பாசம் அப்படி; தேசம் அப்படி! ஆனதாலே தான், அவள் கேட்டு, நான் அன்று தொட்டு இன்று பரியத்தம் நான் எதையுமே மறுதளித்தது கிடையாது; கிடையவே கிடையாது! என் உள்ளம் தொட்டவள் ஆயிற்றே?---அன்பு ஒருபோதும் கேட்பதில்லையாம்; கொடுக்கத்தான் செய்யுமாம்!--- மகாத்மாவை நான் மறுக்க முடியாதுதான்!--- ஆனாலும், எங்கள் அன்பு, அதாவது, எனக்கும் ரஞ்சனிக்கும் இடையிலான உயிர்களின் பாற்பட்ட அன்பு--- உள்ளங்களின் பாற்பட்ட அன்பு கேட்பதும் உண்டுதான்!--- கேட்கப்படும் கையில், கொடுப்பதும் உண்டு; அன்பு என்னும் மகத்தான அற்புதச் சக்தி கொடுக்கல் - வாங்கல் விவகாரத்திலேதானே உயிர்கொண்டு விளங்க முடிகிறது!. அந்திமாலைச் சோகத்தில் சலனம் அடைந்த நெஞ்சம் அந்திதிலா ஆனந்தத்திலே அமைதி அடைந்திட, சுயப்பிரக்கினை பெற்றார் ரஞ்சித்!--- ஆம்! ரஞ்சனி கோபப்படுவதற்கு முன்னதாக, நல்ல பிள்ளையாக உண்டுமுடித்து, மறுபடியும் ஏப்பம் விட்டுவிடவேண்டும்! -- ‘ரஞ்!...என்னோட அன்புத் தெய்வமே! ரஞ்!’ --திட்ட வட்டமானதொரு புதிதான--- நூதனமான உற்சாகத்தோடு சாப்பிடத் தொடங்கினார்: ரஞ்சனியையும் உண்ணும்படி ஏவினார்: பாபு, நந்தினியையும் மறந்து விடுவாரா, என்ன?--- “மகேஷ்-ரதி! வேகம் பண்ணி உண்டு முடியுங்கோ!” என்று கூறி, சிவாஜி பாணியில் ‘கோ’வில் ஓர் அழுத்தமும் கொடுத்தார்.

105