பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அம்மா எங்கே?" ஆர்வமும் துடிப்பும் பொங்க, பாசமும் நேசமும் பொங்கி வழியக் கேட்டார் ரஞ்சித்.

"அம்மா பூஜைக்கு ரெடி பண்றாங்க, உங்க கையிலே சொல்லலீங்களா, அப்பா?”

அப்போதுதான் பனி முத்தம் கலைந்து மலர்ந்த புத்தம் புதிதான ரோஜாப்பூவாகப் புன்னகை செய்கிறாள் நந்தினி; குறும்புத்தனம் அழகான இதழ்களில் மாத்திரமல்ல, அழகான விழிகளிலும் விளையாடுகிறது; விளையாட்டுக் காட்டுகிறது.

பூஜை அறையில் பாத்திரம் பண்டங்கள் புழங்கப்படும் சத்தத்தை இப்போது அவரால் துல்லிதமாக உணர முடிந்தது. மகளை அன்போடும் பாசத்தோடும் ஏறிட்டுப் பார்த்தார். “அம்மா பூஜைக்கு ரெடி பண்ருங்க; உங்க கையிலே சொல்லவீங்களா, அப்பா? நந்தினியின் கேள்வியிலே குரல் கொடுத்த நமட்டுச் சிரிப்பு அவரைச் சிரிக்க வைத் திருக்கலாம். எவ்வளவு நுட்பமாகக் கேட்டுவிட்டாள்!-- சுட்டிப் பெண் 1- என்கிட்.ே சொல்லாமலும் உன் அம்மா காரியங்கள் செய்வது இல்லையா என்ன?” இருதயத்திலே எங்கேயோ ஒர் இடத்தில் வலிக்கத் தொடங்கியிருந்தது. பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்டார்; சகித்துக்கொண்டார். “ஊம், பதில் சொல்லேன், நந்தினி. என்று துண்டுதல் செய்தார்; மனிதர் மகா கெட்டிக்காரர்!.

“ஊஹூம்" என்று பதில் சொன்னுள்நந்திணிப்பெண்.

‘இஸ் இட்...?’ என்று கேட்டார் அப்பா. வியப்பில் விழிகள் கீறல் பட்ட மாதிரி விரிந்தன. நெகிழ்ச்சியுடன் விரிந்தன. புத ல் வி யி ன் பேச்சில் தா னி த் த அழுத்தமும் இறுக்கமும் மென்மையான அவரது மன உணர்வுகளைச் சுண்டி விட்டிருக்கக்கூடும். இதயம்

9