பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
அந்தி நிலாச் சதுரங்கம்

6. பொன் அந்தி!


பொன் அந்தி மாலைப் பொழுது!

அரசியலைக் கசடறக் கற்று, அதற்குத்தக நிற்கக்கூடிய உண்மையுள்ள அரசியல்வாதியைப் போலே, நிதானமான அமைதியுடன் அழகாகத் தரிசனம் தருகிறது அந்திமாலை; மஞ்சள் கிரணங்கள் மனோகரமாகப் பளிச்சிடுகின்றன.

புல்வெளிப் பூங்காற்று பதமாகவும் இதமாகவும் வீசுகிறது.

ரஞ்சனிக்கு வெட்கம் வந்துவிட்டது. வெட்கம்!

பின்னே, என்னவாம்?

“அவளே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!” என்கிற பாவனையில் தன்னுடைய உயிரின் மறுபாதியான பிரியமானவளை - பிரியமானவளான