பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளாக்கப்பட்டுவிட்டேன்!-ஆமாங்க, அத்தான் எனக்குப் பைத்தியம் கியித்தியம் பிடிச்சிடவீங்க, அத்தான்:என்னை நம்புங்க, அத்தான். நம்புங்க! என்னேட இந்தப் பேச்சை நீங்க நம்பாட்டி, அப்பறம், என்னையும் மீறி. அல்லது, உங்களையும் மீறி, தான்...நான்...?-தொடர்ந்த பேச்சினைத் தொடர மாட்டாமல், விக்கிவிக்கி-கேவிக்கேவி அழுதாள் ரஞ்சனி.

அந்த நெருப்பையே விழுங்கிவிட்டவராகத் துடித்தார்: துடிதுடித்தார் ரஞ்சனியின் ரஞ்சித் ரஞ்சனி!-நீ எங்காச்சும் போயிடப் போறியா, என்ன?’ என்று நெருப்புச் சுடுகிறமாதிரி, நீர்த்தாட்சண்யமாகவே கேட்டு விட்டார் அவர்,

மறு நோடியிலே-

“அத்தான்!” என்று ஓங்காரக் காளியென ஓலமிட்ட வளாக, அத்தானே மயிரிழை ஒட்டுறவில் ஒட்டி உறவாடி. நேருக்கு நேராக வெறித்து நோக்கியவாறு, அத்தானின் புதிதான பிஸ்கட் கலர் ஜிப்பாவை மூர்த்தண்யமான வெறியோடு பற்றினுள்: ‘'என்ன கேள்வி கேட்டுப்பிட்டீங்க, அத்தான்?-என்னைப் பார்த்து, உங்க ஆருயிர் ரஞ்சனியைப் பார்த்து, எத்தனை பயங்கரமான-மோசமான-கேவலமான கேள்வியைக் கேட்டுப்பிட்டீங்க"நீங்க?-ரஞ்சனி வெடித்து விடவில்லை; விம்மல்கள்தாம் வெடித்தன. அவளுள் கொழுந்துவிட்டெரிந்த தீக்கங்குகளில் ரஞ்சித் சமர்ப்பித்த கண்ணிர் சிந்திச் சிதறவே, மறு இமைப்பில் அவள் அடங்கி விட்டாள்; எரிந்த தீயும் அவிந்துவிட்டது போலும்:"ஆத்தான், நான் எங்கேயும் போயிடப் போறதில்லிங்க: போயிடவும் மாட்டேன்; என் உயிரை விட்டுட்டு, நான் எங்கேயும் போயிடவே மாட்டேனுங்க, அத்தான்!"... மனிதாபிமானத்தோடே நம்புங்க, அத்தான் குமுறல் வெறி அடங்கிய அவளுடைய தெய்வமணிக் கரங்கள்,

113