பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னுடைய தங்கக் கழுத்தில் தவழ்ந்து ஊசலாடிய தங்கத்தாலியை அக்கினியைச் சாட்சி வைத்துத் தனக்கு அர்ப்பணம் செய்த ஆருயிர் ரஞ்சித்தின் சுடுவிழி வெள்ளத்தை வழித்து விடுவதில் இப்பொழுது முனைப்புடன் முனைத்திருந்தன. எனக்கு அன்றைக்குப் பாவமன்னிப்பை அருள் பாலித்த என் சுவாமி-எனக்கு அன்றைக்குப் பாவ விமோசனத்தை வழங்கின என் ரீராமபிரான் எத்தனே பயங்கரமாகச் சோதித்து என்னை உயிர்க் கழுவிலே ஊசலாடி உருக்குலையச் செய்துவிடடாரே?-ஐயையோ, தெய்வமே!...என் தெய்வமே உளளம் உள்ளுக்குள்ளாகவே செருமிப் பொருமிக் கொண்டேயிருந்தது!

ரஞ்சித் சிறுபிள்ளை மாதிரி அழுதுகொண்டே, தன்னுடைய சிவகாமியான அருமைச் சீதேவி ரஞ்சனியைசீதாப்பிராட்டியுமான ரஞ்சனியை ஏறிட்டுப் பார்த்து, அவளுடைய பார்வையை மாயத்திரையாக மறைத்த கண்ணீரைத் துடைத்தார். ஆருயிரின் அழகான தாழ் வாயை நிமிர்த்தினார்: பேசினார்:

"நீ என்னே விட்டுப்புட்டு எங்காச்சும் போயிடுவி யோன்னு, நான் கடவுள் சத்தியமாய் உன் பேரிலே சந்தேகப்படல்லே! ஊகூம்; ஒருநாளும் அப்படிச் சந்தேகப் படவேமாட்டேன்; என்ளுேட உயிருக்கே ஒரு அர்த்தமும் அன்பும், தருமமும் சத்தியமுமாக விளங்கிட்டு இருக்கிற உன்னே-எனக் குத் தெய்வமான உன்னை ஐயப்பட்டேன்ன, நான் மனுஷனுகவும் இருக்கமுடியாதே, ரஞ்சனி?-நீ கொஞ்ச முந்தி மனசொடிஞ்சு பேசின தோரணையிலே, உன்னோட அருமை பெருமையான உயிர் உன்னையும் மீறி, அல்லது, என்னையும் மீறிப் பிரிஞ்சிடுமோ என்னமோன்னு நான் கதிகலங்கித்தான். நான் அப்படி ஒரு கேள்வியை உன் கையிலே, கேட்டிருக்கேன்; வாய் தவறித்தான். நீ எங்காச்சும் போயிடப் போறீயா? அப்படின்னு கேட்க தேர்ந்திடுச்சு நான்தான் புத்திகெட்டு, கேட்கக்கூடாததை

114