பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உன்கிட்டே கேட்டுப்பிட்டேன்; நீயும் துரும்பைத் துணாக்கிப் பெரிசுபடுத்தி, இல்லாததையும் பொல்லாததையும் எண்ணி எண்ணிக் குமுறிக் கொந்தளிக்கலாமா ரஞ்சனி?-மன்னிக்கப்பட்டவங்க எல்லாருமே, எப்பவுமே. சமுதாயத்தின் மத்தியிலே குற்றவாளிகளாகவே தான் காட்சி தரவேணும்னு விதி ஒண்ணும் இல்லை!-தவிரவும், மன்னிக்கிறவங்க எல்லோருமே தெய்வங்களாகத்தான் இருப்பாங்க என்கிறதுக்கும் விதியாலே சாட்சி சொல்ல வாய்க்காதுதானே?”

பேச்சு முடிந்தது.

பெருமூச்சு முடியவில்லை

அன்பைக் கொடுத்து, அன்பை வாங்கிக்கொண்டதன் விளைவாக, மனச்சுமை குறைந்த மாதிரி உணரலானார், 'கொடுக்கல்-வாங்கல்' தொழில் அதிபர் ரஞ்சித்.

பொன் மாலையில் புன்னகை மணம் கமழ்கிறது.

இப்பொழுதுதான். சோமையாவின் நடமாட்டம் தெரிந்தது.

"அத்தான், நாம பேசிக்கிட்டிருந்ததை இந்நேரம் பெரியவர் சோமையா கேட்டுக்கிட்டு இருந்திருப்பார் போலிருக்குங்க!”

“கேட்டுக்கிட்டுப் போகட்டுமே ரஞ்சனி?--சோமையா நம்ப குடும்பத்து நண்பர்களிலே ஒருத்தர் தானே?-அது போகட்டும்!-பாபுவைப் பத்தி நீ சொன்னுய்;நம்ப பாபுவை நம்மகூடவே இங்கேயே எப்போதுமே வச்சிக்கிட்டால்தான் நல்லது! இந்த முடிவுக்கு, உன்னைப்போலவே நானும் வந்து எத்தனையோ நாள் ஆயிடுச்சே, ரஞ்...?

"மெய்யாகவா, ஆத்தான்?”

"ஊம்...!”

115