பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறுவினாடியில்;

சலசலப்புக் கேட்கிறது.

அதோ, பாபு ஒட்டமும் நடையுமாகப் பெற்றவர்களே நோக்கி வந்துகொண்டிருக்கிறான்!....

பாபு, ஆடும் கலாபமயிலாகவும், ஒடும் கவரிமானாகவும் ஒருசேரத் தரிசனம் தந்தபடி, பெற்றாேர்கள் முன்னிலையில், ஒட்டமும் நடையுமாக வந்து நின்றான்; திருச்செந்தூர்க் குமரனுக்குப் பால் அபிஷேகம் செய்யும்பொழுது, அவன்’ முகத்திலே பால் வழியாதா?-அப்படி, பாபுவின் வதனத்திலும் இப்போது, பால் வழிந்தது. மணிப்பயல் புத்தம் புதிதானதோர் அமைதியோடு காணப்படுகிறானே?

"பாபு!" என்று அன்போடும் பாசத்தோடும் அழைத்து, அருமைத் திருமகனை ஆரத்தழுவி; இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி இரண்டு முத்தங்களை வழங்கிய முதற்பெருமை அப்போதும் பெற்றவள் ரஞ்சனிக்குத்தான் கிட்டிற்று. பாபுவுக்கு இதுமாதிரி முத்தம் கொடுத்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன!-ஆனந்தக் கண்ணீர் ஆடிப்புனலென ஒடுகிறது. பாபுவை இங்கே நிலைப்பாக அமர்த்தி வைத்துக் கொள்ளுவதற்கு எப்பாடு பட்டாகிலும் வழிவகை செய்வதாக அத்தான் சற்றுமுன் உத்தாரம் கொடுத்திருந்த ஆறுதலில் அவளது பெண் மனம் நிரம்பவும் அமைதியடைந்தது.

ரஞ்சித்தின் உந்திக் கமலத்தைவிட்டுப் புறப்பட்ட பாசம் அவருடைய கண்களில் சங்கமம் ஆகவே, பாசக் கண்ணீர் ஒன்று, இரண்டு. மூன்று என்று நன்முத்துக்களாக உதிர்ந்தன. அதே சூட்டோடு, நீள்மூச்சும் நீளமாகப் பிரியத் தலைப்பட்டது. தலையும் இல்லாமல், காலும் இல்லாமல், வெறும் முண்டம் கணக்காக, ஏதோ ஒர் உறுத்தல் அவருடைய உள்ளத்தின் ஏதோ ஒரு முடுக்கில்

116