பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கசிந்தது; கண்களும் கசிந்தன. "ரஞ்...!” என்று அன்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாத அ வ ச ர த் து ட ன் கூப்பிட்டார் ரஞ்சித், அன்புச் சுமையால் அவருடைய உள்ளம் கனத்துக் கிடந்தது போலும்! சுமையை இறக்கி வைக்கவோ என்னவோ, மீண்டும் அழைப்புக் கொடுத்தார்.

அன்பின் மகிமையை அன்புதான் உணர முடியும்: அடுத்த இரண்டாவது நிமிஷத்திலே, ஜாதிமல்லிப்பூ மணக்கத் தொடங்கிவிட்டது.

இளங்காலைப் பொழுதின் இனிமையான புனிதத்துக்கு மத்தியில், பரிசுத்தம் நிரம்பின சுகமான பொலிவோடு வந்து தின்றாள் ரஞ்சனி’ "அத்தான்!” என்றாள்; பாசமும் தேசமும் பொங்கின; வழிந்தன; ‘’ வாங்க அத்தான் , சீக்கிரம்...மணியடிக்கப் போறேன்!” என்று அன்பின் மகிமையை உணர்ந்த நெகிழ்வுடன் தொடர்ந்தாள்.

"மணியடிக்கப் போறது சாப்பாட்டுக்குத்தானே?”

"ஊகூம், இல்லேங்க: பூஜைக்கு!’

“ஓஹோ, அப்படியா?”

“ஆமாம்; அப்படியேதான்!”

பூஞ்சிரிப்பும் புன்சிரிப்பும் சந்தித்துக் கொண்டன.

கண்சிமிட்டலும் கண்ணடித்தலும் கண்பொத்தி விளையாடின.

பெருமூச்செறிந்த மயில் டாலரை மோதிர விரலால் நெருடிக்கொண்டிருக்கிருள் குமாரி நந்தினி, அவள் செய்கை சிந்தனை வசப்பட்டிருந்தது: அ ப் பா வு ம் அம்மாவும் பரிவர்த்தனே செய்துகொண்ட கேள்வி-பதிலைக் கேட்டது தான் தாமதம் உடனடியாக ரசிக்கவே செய்தாள்: அந்த

10