பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளைகெட்ட வேளையிலே, சாயந்தரப் பலகாரம் தயாராகிவிட்ட தகவலை அறிவிக்க எடுபிடிச் செவகி வந்து சேர்ந்தாள் .

பாபுவுக்கு இப்போதே நாக்கில் நீர் சொட்ட ஆரம்பித்தது.

வந்த காரியம் முடிந்துவிடவே, சிறுமி அங்கிருந்து நகரவேண்டியவள் ஆனாள்,

‘அக்கா...அக்கா, ’ என்று கூப்பாடு போட்டான் சிறுவன். இன்னிக்கு என்ன பலகாரம் பண்ணியிருக்கியாம்?’ என்று கேட்டான்.

“எல்லாம் ஒனக்குப் பிடிச்சதுதானாக்கும்,’ என்று 'பிகு' பண்ணினாள் சின்னப்பெண்.

“எனக்கு என்னென்னமோ பிடிக்கும்; இப்ப ரெடியாகி இருக்கிற டிஃபனைச் சொல்லப்படாதா, அக்கா?”

“சொல்றேன். சொல்றேன்: ஆமா, ஒனக்குப் பிடிக்கக் கூடிய பட்சணத்தோட பேரையெல்லாம் சொல்லு, பார்க்கலாம், பாபு!”

“அந்தப் பேர்களைச் சொன்ன, உன்னாலே எப்படிப் பார்க்கமுடியும்?-கேட்கத்தானே முடியும்?”

செவகியை வாரம் ஒருதரம் வசமாகமடக்காவிட்டால், பாபுவுக்குப் பொழுது போகாது.

அவள் 'இதோ, பார்த்துக்கொள்’ என்கிற பாவனையில், எண்ணெய் வழிந்த முகாரவிந்தத்தில் அசடும் வழிய நின்றாள். பலகாரம் சுட்ட தேங்காய் எண்ணெயில்-விருந்தினர்களுக்கென்று பிரத்தியேகமாகக் கொள்முதல் செய்திருந்த தேங்காய் எண்ணெயில், முகமும் முகமும் வைத்த மாதிரி, ஒரு கை அள்ளி, அதைத் தன்னுடைய முகத்திலே

119