பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னே?

ஓ!-ரதி அம்மாவா?

"பாபு, பஜ்ஜி ரொம்ப உச்ரமா இருக்கில்ல?" என்று அபிப்பிராயம் கேட்டாள் கேரளப் பூங்குயில்.

"ஓ!" என்று ஒய்யாரமாக விடைமொழிந்தான் பாபு!

ஒரு சிதம்பர ரகசியம்!-பாபு, இன்னமும் வெங்காயப் பஜ்ஜியைத் தொடவே இல்லை!

ரஞ்சித்துக்கும் ரஞ்சனிக்கும் சிரிப்பைத் தடுத்துக் கட்டுப்படுத்த முடியாமலே போய்விட்டது.

ரதியின் சந்திரபிம்ப வதனம், மேகத்துண்டத்திடம் பலாத்காரமாகச் சிக்கிக் கொண்ட பிறை நிலவுக் கீற்றை நினைவூட்டும் பாங்கில் சிறுத்துக் கறுத்தது. "பாபுவுக்கு என்னையும் பிடிக்கல்லே போலிருக்கு!"

"நல்லவங்களை நேக்குக் கட்டாயம் பிடிக்குமே? ஞான் இப்போழ் பஜ்ஜி கழிக்காம்!" பாபு இப்போதுதான் பஜ்ஜியைத் தொட்டான்; நிஜார்ப் பைக்குள்ளே பள்ளி கொண்டிருந்த அந்தத் துண்டுக் கடிதத்தை மறுபடி தொட்டுச் சரி பார்த்துக் கொள்ளவும் மறக்கவில்லை. படுசுட்டி மட்டும் அல்ல; படு சமாத்துங்கூட!

பொங்கு விரி காவிரியாக வேர்வை பெருகுகிறது.

இந்தப் பேரதிசயத்துக்கு ஆளான புள்ளி!-சரிதான்; மகேஷ்தான்! பாவம், அசந்து மறத்து கூட அவர் பார்வை பாபுவின் பக்கமே திரும்பவில்லை!

ரஞ்சனியை ரஞ்சித்தும், ரஞ்சித்தை ரஞ்சனியுமாக ஒரு கேள்விக்குறியோடு பார்த்துக் கொண்டார்கள்: பாபுப் பயல் என்ன புதிர் போடப் போகிறானாம்?- பகவானே!...

அ-8-A

125