பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“பேஷ், பேஷ்! நல்லாய்ச் சொன்னீங்க ; உண்மையை உண்மையாய்ச் சொல்லிட்டீங்க!...மிஸ்டர் மகேஷ்!உங்களை எனக்குத் தெரியாதா?...”

ரஞ்சித் ஆத்திரம் தாங்காமல், சத்தம் போட்டுப் பேசினார்; நெஞ்சில் வீரிட்டுப் பீறிட்ட வெஞ்சினம் பற்களில் நெரிபட்டு நிர்த்துளிப்பட்டது: அகன்று விரிந்த கண்கள் மறுபடிச் சிவப்பேறிச் சிவந்தன: கண்ணின் கருமணிகள் கண்ணீரில் பளபளத்தன. சொந்த விஷயம்!--- எது சொந்த விஷயம்? என் பாபுவோடே --- எங்க பாபுவோடே பேசறதும் பேசாததும் உன் சொந்த விஷயமா?---‘அட, பாவி!’... வேர்வை, முத்துக் குளித்தது.

ரஞ்சித்தின் கோபம் மகேஷூக்குத் தீரத் தெளியத் தெரியும்; ஆகவே, அவர் மறுபேச்சாடத் துணியவில்லை; தலைகுனிந்தார்: ‘ஐயய்யோ...பாபு!...சோட்டானிக்கரைப் பகவதி அம்மே!’ ஈரவிழிகள் என்ன காவியம் படிக்கின்றனவாம்?

ரஞ்சனி-ரஞ்சித்தின் மனையாட்டி-பாபுவின் அன்னை தவியாய்த் தவிக்கின்றாள்: தண்ணீராய் உருகுகின்றாள்!...

ரதி அகம் சிணுங்கினாள்.

நந்திணிக்குக் காப்பிச் சுவைப்பு மாறிவிட்டது; அல்ல, மாற்றப்பட்டது.

இளங்கன்று பயம் அறிவதில்லை!-ஆவேசமும் ஆத்திரமுமாக மகேஷை வெறித்தும் முறைத்தும் பார்த்தான் பாபு;

மகேஷ் பதுங்கினார்; ஆனால், அவர் புலியல்லவே!-- அவர் மனிதர்!-ஆகவே, என்னவோ ஓர் உறுத்தல் அச்சப்படுத்தவே, அச்சத்தில் விளைந்த ஆற்றாமையுடன் இருக்கையினின்றும் மெதுவாக எழுந்தார்: நெற்றித் திட்டில் ஒற்றிக் கிடந்த வேர்வை, இப்போது சிறுகச்

130