பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றமளித்த மகேஷ், பையப் பைய விழிகளை உயர்த்திப் பின்பு, கண்களையும் உயர்த்திப் பாபுவை இப்போது நேருக்கு நேராகப் பார்த்தார்: பார்வையிட்டார்!-- “பாபு!” என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.

பாபுவும் ஏறிட்டு நிமிர்ந்து, தலையை நிமிர்த்தினான் !

ரஞ்சனி தீக்கணப்பின் நடுவில் அகப்பட்டுச் சிக்கிக் கொண்டவளாகத் துடித்தாள்; தடுமாறினாள்; தத்தளித்தாள்; அன்றைக்கு, ஸ்ரீராமபிரானின் சோதனைக்கு ஆளாகி அக்கினிப் பரீட்சைக்குத் தயாராக நின்ற ‘புணையா ஒவியம்’ இன்று, இப்போது அவள் நெஞ்சிலும் நினைவிலும் புனைந்த ஒவியமாகி நிழலாடிச் சிரித்திருக்க வேண்டும்; விதியாகவே வினைசூழச் சிரித்திருக்கவேண்டும்!...

வெறி பிடித்தவராகவும் பைத்தியம் பிடித்தவராகவும் நெஞ்சைத் தடவித் தடவி, இருதயத்தைக் தேடிக் கண்டு பிடித்துப் பிசைந்து கொண்டிருந்தார் ரஞ்சனியின் உயிர்த் துணைவர் ரஞ்சித்!- பாபுவின் அன்புத் தந்தை ரஞ்சித்: உயிர் மானம் உயிர்க் கழுவில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

இப்போது:

பாபு நடந்தான்.

பாபு, விதியாக நடந்தான்.

மகேஷ் நின்ற இடத்தை நோக்கி நடந்தான் பாபு.

பாபுதான் விதியா?

விதிதான் பாபுவா?

“ஊம்; சொல்லுங்க, மகேஷ் ஸாரே!” என்றான் பாபு, களங்கம் இல்லாத அவனுடைய கண்களிலே, ஆத்திரம் இருந்தது. பால் வழிந்த பிஞ்சு முகத்திறகுக் களங்கத்தைக் கற்பிப்பது போன்று அவனது இடது

132