பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவரது பார்வை முதலில் ரஞ்சனி மீதும், பிறகு, ரஞ்சித் பக்கமும் சாய்ந்தது: “ஐயப்பா என்னைச் சோதிச்சிடாதே!... ஞான் நிரபராதியாக்கும்!.... ,” நெஞ்சத்தின் நெஞ்சம் பாவத்தின் மன்னிப்பில் உருகியது:உருக்குலைந்தது: “பாபு...பாபு!”

ரஞ்சனியின் உயிர் இயங்கத் தொடங்கிகிறது.

ரஞ்சித் அமைதியாகப் புன்னகை செய்கிறார்.

‘ஒமேகா’ சிட்டுக் குருவி ஆறு முறை, முறை வைத்துக் கூவியது.

அந்தி மயங்குகிறது; மயங்கிக் கொண்டிருக்கிறது.

பாபு, மீண்டும் கூப்பிட்டான்: “மகேஷ் ஸார்!”

“சொல்லு, பாபு!”

“நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லே; கேட்கப் போறேன்!”

“ஊம், கேள்!”

“நீங்க என்மேலே இவ்வளவு அன்பு பாசமும் வச்சிருக்கிறதுக்குக் காரணம் என்னாங்க, மகேஷ்! உங்களுக்கும். எனக்கும் என்ன சம்பந்தம், மகேஷ் ஸாரே? ஊம், சொல்லுங்க!” என்று ஆணையிட்டான் பிஞ்சுப் பாபுப் பயல்.

ரஞ்சனிக்குத் ‘திக்’கென்றது: “கிருஷ்ணபரமாத்வே!”

ரஞ்சித் மலைத்தார்: “கண்ணபிரானே!”

மகேஷ் விம்மினார்: “நான் மனுஷன்!- அதுதான் உனக்கும் எனக்கும் உண்டான சம்பந்தம்!...” -

“ஒஹோ?...அவ்வளவே.தானே?...” என்று ஓங்காரமிட்டுச் சிரித்தான் பாபு-நிஜார்ப் பைக் கடிதமும் அவனோடு சேர்த்துகொண்டு சிரித்திருக்கலாம்!