பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
அந்தி நிலாச் சதுரங்கம்

7. பாபுவின் தெய்வ அவதாரம்!


தமிழ்ச் சாதி -சமுதாயத்தின் பண்பாடு தழுவிய நெறிமுறைகளுக்கும், மண வாழ்க்கையின் முன்-பின் கதையின் பாற்பட்ட காரண காரியங்களுக்கும் தக்கபடி, மென்மையான நல் உணர்ச்சிகளுக்கு எளிதிலே ஆளாகி விடுகின்ற மனப்பாங்கும் மனப்போக்கும் கொண்ட பாங்கர் ரஞ்சித், நல் இணக்கமான ‘சரி’ என்னும் ஒப்புதலை மகேஷ் சொல்லக் கேட்ட மாத்திரத்தில், மண்ணிவிருத்து விண்ணுக்கும், விண்ணிலிருந்து மண்ணுக்குமாகப் பறந்தார்; பறந்துகொண்டிருந்தார்.

அந்தி மயங்குகிறது. மயக்குகிறது!

அசோக மரங்களைக் கட்டி அணைத்த பூங்காற்று, கட்டிளங்காளையின் புது ரத்தத்தை நினைவூட்டுவது