பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போன்று, இளமைக் கோலம் தாங்கிச் சிருங்கார ரசம் குலுங்கத் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.

குறளி வித்தை செய்து தங்கள் வாயை யாரோ அடைத்துவிட்டமாதிரி, மகேஷசம் ரதியும் வாயைத் திறக்கமாட்டாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்கள்.

ரஞ்சித்தின் பார்வை இப்போதுதான் குமாரி ரதியிடமிருந்து திரும்பியது! செயற்கையின் கண்படாமலே, இயற்கையிலேயே எத்தனை அழகோடு பொலிகிறாள் இந்த ரதிப்பெண் -வசீகரமான வடிவ அமைப்பு இம்மாதிரிப் பெண்களிடம் கூடியும் கைகூடியும் சரண் அடைவதற்கும் கேரளத்தின் உன்னதமான மண்வளம்தான் மூலாதாரம் ஆகியிருக்கவேண்டும்.

மென்மையான கனைப்புச் சத்தம் மென்மையாக ஒலித்தது.

ரஞ்சித் திசைமாறித் திசை மறுகினார்.

ஒ!.ரஞ்...தான்!

இளமை திரும்பும்போது, அது ஊஞ்சலாடாமல், வெறுமனே கால் கடுக்க நிற்பதில்லை.

"என்ன, ரஞ்சனி?" என்று கேட்டார் பாங்கர்: சொற்களில் தடுமாற்றம் தெரியவில்லை. குற்ற உணர்வு தெரிந்தது. ஒரக்கண்ணில் ரதியை ரசித்ததை யூகித்திருப்பாளோ ரஞ்சனி? "அப்புறம் ப்ரோக்ராம் என்ன?” என்று தூண்டினார்.

‘என்னாங்க அத்தான், இப்படிக் கேட்கிறீங்க? நீங்க சொன்னதுதான் ப்ரோக்ராம்!-முதலிலே டி. வி: அப்பறம், ரேடியோ; பின்னே, டாஜ்: பிறகு, பீச்...கடைசியாய்ச் சாப்பாடு!

140