உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மனசு கெட்டுப் போச்சா!"

".............."

"ஏன், என்ன காரணம்?”

"................"

"சொல்லு, ரஞ்; நான் விடுகதை போடுறேன்னு: எம் மேலே குற்றம் சாட்டிட்டு: இப்போ நீயே விடுகதை போட்டா, நான் என்ன செய்வேனாம் விளங்கிற மாதிரினாலே, புட்டு வச்சுப் பேசிதானே, எனக்குச் சங்கதி புரியும், ரஞ்சனி’

“நல்ல அத்தான் நீங்க!"

"நான் நல்ல அத்தான் இல்லாமல், மறுகா கெட்ட அத்தான, என்ன?”

"ஐயையோ! துரும்பைத் தூணாய் வளர்க்காமல், கொஞ்ச நேரம் என்ன நிம்மதியாய் இருக்க விடமாட்டீங்களா, அத்தான்"

"ரஞ்......!”

"........."

ரஞ்சனியின் மனம் கெடும்படி ஒரு சொல் சொல்லி விட்டால்கூட, மணமறியாமல் தவறிவிழுந்த அச்சொல்லுக்காகக் செஞ்சிக் கூத்தாடி அவளிடம் கழுவாய் சம்பாதித்துக் கொண்டால்தான் ரஞ்சித் மனச்சமாதானம் அடைவது நடைமுறை; அப்படிப்பட்ட மனப்போக்கும் மனப்பக்குவமும் கொண்டிருந்தவர், இப்போது மாசிடி துடித்திடச் செயலிழந்து. செய்வகை அறியாமல், கதி கலங்கி நின்றுவிட்டதில், ஆச்சரியம் இல்லைதான்! இல்லக் கிழத்தியின் பொற் கரங்களைப் பொன்னைப் போற்றுவது போலப் பற்றிக்கொண்டார் அவர்: கண்ணனின் கீதோப

142