பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசத்தில் ஆறுதலும் தென்பும் பெற்ற அர்ஜுனன் மாதிரி, மனைவியின் மேனி ஸ்பரிசத்தான் விளைந்த ஆறுதலுடனும் தெம்புடனும் புதிய விழிப்புப் பெற்றார்: "ரஞ்சனி, உன்னேட மனசு புண்படும்படி நான் ஒன்னும் சொல்லலேயே?" என்று பரிதாபமான கெஞ்சுதலுடன் கேட்டார். "நாம துங்கறதுக்கு முன்னாடி, நம்மோட பாபு பிரச்னைக்குத் தீர்வு காணவேணுமேன்னு ஞாபகப்படுத்த நினைச்சேன்; அவ்வளவுதான் கதை,” என்று விடுகதைக்கு விடையும் விளக்கமும் அளித்தார் லட்சாதிபதி,

ஆகாயத்தில் மசூதிப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.

பூமியில் ரஞ்சனியின் உள்ளம் அமைதியில் ஆனந்த தடணம் ஆடிக்கொண்டிருந்தது: ஆகவே, அவள் பெருந் தன்மையோடு மனம் திறந்து சிரித்தாள்: அவ்வளவு தானா கதை? நல்லாய்ச் சொன்னிங்க போங்க...அத்தான்!” என்றாள்.

ரஞ்சித் முகப்புப் பக்கம் போய்விட முனைந்தார். -

“அத்தான்! என்ன போlங்க?’ என்று கூவி, அத்தானின் கையைப் பிடித்து இழுத்தாள் ரஞ்சனி.

“நீ போகச் சொன்னாய்; நான் போனேன்!”

‘ஒமை குட்னெஸ்’ என்று வாய் திறந்து சிரித்தான் ரஞ்சனி. இது ட்ரை ஜோக்-ஆனாலும், என்னோட அன்பு அத்தானுக்காகத்தான் சிரிச்சு வச்சேன்’ என்றாள்.

"ஓ!"

"ஊம்! எனக்காகவேண்டி, எத்தனையோ செஞ்சிருக்கித தர்மப் பிரபுவாச்சுங்களே நீங்க! பாழும் இந்த உடம்பிலே கி.யிர்னு ஒண்ணு ஒட்டிக் கிடக்குதின்னா, அதுக்கு நீங்க தானுங்களே மூலகாரணம்?”

143