பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நான் ஏன் அழப்போறேன், பாபு?” என்று கெட்டிக்காரியாகவே தப்பித்துவிட்டாள் ரஞ்சனி.

“அதுதானே பார்த்தேன்?- என் அம்மா எதுக்கு அழவேணும்? தப்புச் செஞ்சவங்கதான் லோகத்திலே அழுவாங்களாம்!-எங்க குருஜி பிரார்த்தனையப்ப அடிக்கடி சொல்லுவாங்களே!” என்று வியாக்கியானம் படித்து நிறுத்தினான் பாபு.

“பாபு, நீ நிஜமாவே சாதாரணப் பிறவியே இல்லேப்பா!”

“ஐயையோ என்னைத் தெய்வமாக ஆக்கப் பார்க்கிறீயா, அம்மா”

“பின்னே என்னவாம்?-நான் உன்னைத் தெய்வமாகப் பார்க்கத் தொடங்கி வருஷம் பத்து ஆகிடுச்சே, பாபு?” மறு தரமும் பாசத்தின் முத்தங்கள் பரிமாறப்பட்டன, பகிரங்கமான அன்போடு புன்னகை புரிந்தாள்: ரகசியமான பாசத்தோடு கண் கலங்கினாள் அவள்!-அன்பு ராஜ்யத்தின் மகாராணி அவள்!-அவள் ரஞ்சனி.

ம்மா, அம்மா!... நீ என்னைத் தெய்வமாகப் பாவிப்பதைப் பார்க்கையிலே, நீ என்கையிலே வரம் கிரம் கேட்பாய் போலிருக்குதே, அம்மா?”

“ஆமா, பாபு ராஜா! கட்டாயம் வரம் கேட்பேன்!”

“ஊம், ஆல்ரைட்! வரம் கேள்; இதோ, கொடுக்கிறேன்!”

“ஊகூம்; இப்ப கேட்கமாட்டேன்; சமயம் பார்த்து, சந்தர்ப்பம் பார்த்து, எனக்கு அவசியப்படும்போது, நான் உன்கிட்டே கேட்கக்கூடிய வரத்தை நீ தப்பாமல் கொடுத்தாக வேணுமாக்கும்!”

147