பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஓ! ரெடி!" என்று சொல்லிக் கும்மாளத்துடன் பெற்ற தெய்வத்தைப் பாசம் மேலிடக் கட்டிப்பிடித்து. அன்பு மேலோங்க முத்தங்களை வாரிவாரி வழங்குகிறான் பாபு! - ஒருவேளை, பழனிமலை ஆண்டியான பாலமுருகனே இப்படிப் பாபுவாக அவதாரம் எடுத்து, இங்கே ஜனனம் எடுத்திருப்பானோ?

அம்மா ஆனந்தக் கண்ணீரை ஆனந்தமாக வடிக்கிறாள்.

மகன் திணறுகிறான்; "கண்ணீர் வடிக்கிறீயா, அம்மா?" என்று கேட்கிறான்.

"ஆமாப்பா, பாபு: இது ஆனந்தமான கண்ணீ ராக்கும்!"

"அப்படியானால், சரி, அம்மா!"

செல்வன் பாபுவைச் செல்லமாக ஏற இறங்கப் பார்க்கிறாள் ரஞ்சனி; பாபுவின் சின்ன உருவத்திலே, கோடரியும் கையுமாகப் பெரிய உருவத்தில் பரசுராமர் தோன்றினார்!- பாபுவின் தாய், நந்தினி இல்லத்தின் தலைவியாகித் தவித்தாள். பட்டுக் கருநீல விழிகளில் கட்டுமீறின புதுவெள்ளம் நுங்கும் நுரையுமாகக் கொப்புளிக்கிறது.

ரஞ்சித் பையப் பையத் துணைவியையும் குமாரனையும் நெருங்கினார்; தைமாத மேகமென அவரது முகம் கறுமை கண்டிருந்தது. பாபு, என்னவோ முக்கியமான சேதியைச் சொல்லப் போவதாகப் புதிர்போட்டு, 'சஸ்பென்ஸ்' போட்டானே? என்ன புதிராம் அது?-தங்கட்குத் தெய்வமாக ஆகிவிட்டிருக்கும் அருமைமிகு பாபு இந்த ஜன்மத்தில் என்ன அவதாரம் எடுத்திருப்பான் என்ற சர்ச்சையில் தாமும் ரஞ்சனியும் ஈடுபட்டிருந்த காலை, 'ஏன், பரசுராமர் அவதாரமாகவும்கூட இருக்கலாம் அல்லவா, ரஞ்...?' என்பதாக எதிர்க்கேள்வி கேட்டது நெஞ்சிலும் நினைவிலும் பளீச்சிடவே, அவரது நேத்திரங்களில் கருமணிகள்

148