பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பளபளத்தன. விதி ஆடத் தொடங்கிய அந்திமாலைச் சதுரங்க விளையாட்டு, விதியின் எழுத்தைக் கிழித்தெறிவதைப்போலே, ரஞ்சித்-ரஞ்சனி தம்பதி மேற்கொண்ட சவாலின் ஒரு தார்மிகமான நல்ல முடிவின் பேரில் தொடர்ந்து, பின், அது அந்திநிலாச் சதுரங்க விளையாட்டாக உருக்கொண்டு, உருமாறி, அவ்விளையாட்டு விதிக்குத் தோல்வியை ஏற்படுத்திவிட்ட அந்தமான அந்த நிகழ்ச்சியையும் அவரது மனமென்னும் நல்ல பாம்பு படம் எடுத்துக் காட்டியது!-சோகமயமான நெடுமூச்சில், கண்ணீரின் அன்புமயமான ஈரம் தடம் பதிந்திருந்தது.

தன்னுடைய முதற்காதல் நிறைவேறாத-நிறைவேற்றப்படாத ஆறாத துயரத்தில்-ஆற்றப்படாத துயரத்தில் மனம் வெறுத்து, உயிர் வெறுத்து, உயிரைப் போக்கிக் கொள்ள முயன்ற ஒரு கருக்கலில், ஈடுஎடுப்பில்லாத ஓர் ஆதரிச விடியலாகத் தோன்றி, தன்னுடைய உயிரையும் உயிர்மானத்தையும் காத்து, பின்னர், அமிர்தயோகம் கூடியதொரு சுபயோக சுபதினத்திலே, அக்கினியைச் சாட்சிவைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துத் தன் கைத்தலம் பற்றித் தனக்குத் திருப்பூட்டிய அந்த ஏழைப் பங்காளன் ரஞ்சித்தை-இந்த அன்புத் தெய்வம் சஞ்சித்தைக் கூர்த்தமதிபதிந்துப் பார்வையிட்டான் அபலை ரஞ்சனி; நெஞ்சின் அலைகள் விதியின் அலைகளாகிக் கத்தின; ஆ! வந்த பொற்பாவை, பதம் மாறும் பொழுது, பாவத்தை மாற்றிக்கொள்ளும் கதையாக, முகத்தில் சோகத்தை அழித்து, மகிழ்வை எழுதினாள் ரஞ்சனி; அப்பால், பாபுவைக் கூப்பிட்டாள்.

பாபுவின் புதிருக்கு இனியாகிலும் நல்லவிடை கிடைத்து விட்டால் தேவலாம் என்கிற உணர்ச்சியில் அமைதியைச் சேகரம் செய்தவாறு, பாபுவை நோக்கினார் ரஞ்சித்.

அ-10

149