பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பாவையும் அம்மாவையும் ஒருசேரப் பார்த்தான் பாபு.

விதிக்குப் பேசத் தெரியாது.

ஆனால்....

பாபு இதோ, பேசப்போகிறான்!

மகேஷ் அதோ, நடந்து வருகிறார்!

"அம்மா, மத்தியான்னம் நான் முக்கியமான விஷயத்தைச் சொல்லப்போறதாகச் சொன்னேனே?- அது என்ன விஷயம்னு உன்னாலே கற்பனை செய்ய முடிஞ்சுதா, அம்மா?"-பாபு வினாக் கணையைத் தொடுத்தான்.

எதிர்பாராமல் தவறிழைத்து, எதிர்பாராமல் சட்டத்தின் விலங்குப் பிடிக்குள்ளே சிக்கிக்கொண்ட பெண் ஒருத்தி, மான அவமானத்தால் அஞ்சி ஒடுங்கித் தவித்துத் தடுமாறும், கோலத்தில், கோலவிழிகளில் சஞ்சலம் மாக்கோலம்போட நிலைகுலைந்தாள் ரஞ்சனி. சிவந்த அதரங்கள் வெளுத்தன: பிதுங்கின; நயனங்களின் நிலையும் அப்படியே!

"நீங்களாச்சும் அந்தத் துப்பைத் துலக்கமுடியுமா, அப்பா?"

"ஊகூம்!"

"சரி, நானே சொல்லிட்றேன்: ராத்திரியிலிருந்து இக்கேயே, என்னோட பங்களாவிலேயேதான் நான் தங்கிப் படிக்கப் போறேன்!- ஹாஸ்டலிலே காலம்பறவே தேவையான மீனுமதியையும் வாங்கிக்கிட்டேன். இனியாச்சும் நீ ராத்திரியிலே நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேதானே. அம்மா?

150