பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"சத்தியமாய் இனிமேலே நான் ஆனந்தமான நிம்மதியோடே அழகாகப் படுத்துத் தூங்குவேண்டா, பாபு. எட்டிப் போயிட்ட தெய்வம் என்கிட்டே ஒட்டி வந்ததுக்கப்பறம், நான் அமைதியாக உறங்குறதுக்குக் கேட்கவா வேணும்?"

"உங்களுக்குத் திருப்திதானே, அப்பா?"

"நிச்சயமாக!-நல்ல காலம், எங்களை நீ தல்லதனமாய்க் காப்பாத்திவிட்டாய், பாபு! நீ நல்லா இருக்கணும்; விஷ் யூ ஆல் த பெஸ்ட், மை டியரஸ்ட் பாபு!..."

"தாங்க் யூ, ஸோ மச், டாடி!"

இயற்கைத் தாய் அவ்வப்போது சீதனம் தரும் பூங்காற்றை நன்றியுணர்வோடு வஞ்சனையின்றி அனுபவித்துப் பழகிய ரஞ்சித், இப்போது சற்றுக் கூடுதலான நிம்மதியோடு அந்திமாலைத் தென்றல் அனுபவித்தார். 'பாபு பிரச்னை தீர்ந்தது!' என்று , தனக்குத்தானே சொல்லிக் கொண்டு பெருமிதம் அடைந்த சடுதியில், மனக்குதிரை கடிவாளத்தைக் கழற்றி வீசிவிட்டு, காலத்தை ஊடுருவி முன்னும் பின்னுமாகப் பாய்ந்து பாய்ந்து திரும்ப எத்தனம் செய்யவே, அவருக்குச் சொந்தமான மனத்தில், பத்து வருஷத்துக்கு முந்திய அந்த அந்திநிலாச் சதுரங்கத்தின் முன்கதையும் பின்கதையும் அச்சுப்பிசகாமல் முத்துக் கோத்தமாதிரி ஏடுவிரித்தன; சுடு வெள்ளத்தில் சோகப் பெருமூச்சு விரிந்தது. 'பாபுப் பிரச்சினை எங்கே தீர்ந்தது?- எப்படித் தீரமுடியும்? அது ஆண்டவன் மனசு வச்சு நல்ல விதமாய் தீர்த்தாகவேண்டிய பிரச்னை ஆச்சுதே? ஈஸ்வரா!... இன்னக் கறுப்பர் ஸ்வாமியே! எங்களை நல்லபடியாய்க் காப்பாத்திடு! நானும் என் ரஞ்சனியும் தெய்வமாய்ப் பாவிச்சுக்கிணு வருகிற எங்க பாபுவை எங்களோட ஆயுசு பரியந்தம் எங்களுக்குத் தெய்வமாகவே விளங்கும்படி செஞ்சுப்பீடு, அப்பனே. அம்மையப்பனே!' கண்ணீரைப்

151