பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உண்மைதானுங்க, மகேஷ் ஸாரே!-ஆனா, இதுவே தான் அநேகமாகக் கடைசிச் சந்தர்ப்பமாகவும் இருக்கும்னும் நான் நம்புறேன்!" என்று முகத்தில் அடிக்காத குறை யாகக் கூறினான் பாபு.

மகேஷுக்கு முகம் செத்துவிட்டது. கண்களில் மஞ்சி விரட்டுக் காளையாகச் சுடுகின்ற கண்ணீர் சுட்டதுடன் நிற்காமல், முட்டவும் செய்தது. "பாபு...பாபு!" -உள்மனம் விம்மிப் புடைத்துச் செருமிப் பொருமியது. பாபு தப்பிப் பிறந்த இனிய செய்தியைக் காலம் கடந்து கேட்டதும் கேட்காததுமாக, உடனடியாகக் கொச்சியினின்றும் பறந்து வந்து பாபுவைத் தெய்வமாகவே தரிசித்து மகிழ்ந்து கண்ணீர் சிந்தி, அவனுடைய இடது கன்னத்துக் கறுப்பு மருவைக்கண்டு நிலைகலங்கித் தடுமாறிய நிலையில், அவனது உதடுகளில் முத்தம் கொடுத்து பிரிந்த அந்த நாள் அவருடைய மொனக் கண்ணீரில் மலரிந்து மறையவும் தப்பவில்லை!-பழைய ஞாபகத்தில் ஷர்ட் பையைத் துழாவியதும்தான், பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதம்-பாபுவுக்கு வரைந்திருந்த கடிதம் மாயமாக மறைந்துவிட்ட விவரத்தையும் புதிய ஞாபகத்தில் பதித்துக் கொள்ளவும் வேண்டியவர் ஆனார் அவர். எங்கே போய்விட்டது. அந்தக் கடிதம்?

வண்டுகளின் இதமான ரீங்காரம்.

மலர்களின் சுகந்தச் சிரிப்பு.

அந்தி நிலவின் ஆனந்த ராகம்.

"மிஸ்டா மகேஷ், நாமெல்லாம் வெளியே போய்த் திரும்பியானதும், உங்க கையிலே ஒரு வெட்டர் கொடுப்பேன்!"

"செரி!"

153