பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பர்ஸின் பணவீக்கம் குறைந்தது!-ரஞ்சித் என்றான், ரஞ்சித் தான்!

இரவு வந்தது.

பங்களா வந்தது.

இம்பாலாவும் வந்தது.

ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, இன்றைக்கு விடியலிலே தான் கலியாணம் பண்ணிக்கொண்டவர்கள் மாதிரி, கம்பீரத்தோடும் மலர்ச்சியோடும் அமைதியாகவே காரின் பின் ஆசனத்திலிருந்து இறங்கினார்கள்.

பின்புறத்து இருப்பிடத்தின் இருமுனைகளின்லும் தாலிப் பாய்ந்து வெளியேறிய பெருமைக்கு உசுத்தவர்கள் அக்கா நந்தினியும் தம்பி பாபுவும்தான்.

இளைய நிலா, கடைக்கண் பணியில் ரசனையோடு ஈடுபட்டிருக்கிறது.

இளைய ராஜாப் பயல் பாபு எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்காகவோ ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து விட்டிருந்தான். சுட்டிப் பயலுக்கு அதற்குள் அப்படி என்னதான் மாளாவ சிந்தனை வந்து தொலைத்ததோ, தெரியவில்லை!- பால் வழியத்தக்க தன்னுடைய பிஞ்சு முகத்தின் இடது கன்னத்திற்குத் திருஷ்டி கழித்த அந்த ஓர் அவலட்சணச் சின்னத்தை - இயற்கையின் விதி முத்திரை குத்தியிருந்த அந்தக் கறுப்பு வடுவை- மருவை விரல்கள் நடுங்கத் தடவி விட்டுக் கொண்டேயிருந்தான். அதே நேரத்தில், மகேஷின் இடது கன்னத்தில் தரிசனம் கொடுத்த இதே மாதிரியான கன்னங்கரிய தழும்பு-மரு அவனுடைய பால், மணம் மாறாத பச்சை மனத்தில் பயங்கரச் சிவப்பாக அபாய அறிவிப்புச் செய்யவும் தவறி விடவில்லை இப்போது அவன் சிந்தனை முனைப் படையத் தொடங்கியது; மலர்ந்த

155