உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூக்களாக மலர்ந்திருந்த விழிகள் கன்றிச் சிவந்து வந்தன: அவை கலங்கவும் தொடங்கின, 'என்ன ஆச்சரியமாம் இது? மகேஷோட இடது பக்கக் கன்னத்திலே இருக்கிற அசிங்கமான கறுப்பு மரு மாதிரியே, என்னோட இடது கன்னத்திலேயும் ஒரு கறுப்பு வடு அலங்கோலமாய் விழுந்திருக்கிறதே? சே!... உப்புச் சப்பு இல்லாத இந்த அசிங்கத்தை பாவம், அம்மாகிட்டேயோ, இல்லாட்டி அப்பாகிட்டவோ கேட்டாக்க, அவங்க கை கொட்டிச் சிரிக்க மாட்டாங்களாக்கும்?- ஆண்டவனின் சிருஷ்டி ரகசியங்களிலே இதுவும் ஒண்ணாக இருக்கலாம்னு கடைசிப் பட்ச விளக்கம் ஒண்ணைச் சொல்லிட்டு அவங்க 'தெய்வமே'ன்னு தப்பிச்சிக்கிடப் போறாங்க!... மருவும் ஆச்சு; மண்ணாங்கட்டியும் ஆச்சு!- மகேஷ் யார்? நான் யார்? எனக்கும் அந்த ஆளுக்கும் என்ன சம்பந்தமாம்?-என்னமோ அதிசயம் கூத்தாட்டம், சொல்லி வச்சாப்பிலே எங்க ரெண்டு பேர் இடது கன்னங்களிலேயும் கடவுள் எங்களைப் பிண்டம் எடுத்துப் போடுறப்பவே ஒரு பாழாய்ப்போன மருவை உருட்டித் திரட்டி வச்சுப்பிட்டான்!- அவ்வளவு தான் கதையும் காரணமும்!- மகேஷ் எக்கேடும் கெட்டுப்போய்த் தொலையட்டும்! எனக்கு என்னா வந்ததாம்?' நிச்சலனமாய்க் கைகளை உதறிவிட்டு, முகத்தின் வேர்வையை முழங்கையால் துடைத்த வண்ணம், நிர்மலமான விழிகளால் அன்னையைத் தேடினான் பாபு.

ரஞ்சனி ஒயிலோடு கைகளை வீசியவளாக முகப்பை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். வீடு தேடி வந்திருக்கும் மகேஷ்-ரதி விருந்தினர்களுக்கு இராச் சாப்பாட்டுக்கு வழி பண்ண வேண்டாமா?-ஒன்பது மணிக்காகிலும் இலைபோடா விட்டால், அத்தான் குதித்து விடமாட்டாரர? சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்!-இந்த அத்தான் சாதுவான 'சாது'வா, என்ன-அம்மாடியோ!-ஆனால், ஒரு விதி-வீலக்குக்குக் கட்டுப்படுபவர்!- இவர் வள்ளுவம்

156