பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வகுத்த அன்பு உடையார் அல்ழவா?- 'என்னோட அன்பு அத்தானுக்கு என்னோட அன்பான தெய்வத்துக்கு உரித்தான அந்த நன்றிக்கடனைத் தீர்க்க நான் இன்னம் ஏழேழு ஜன்மங்கள் எடுத்தாலும், போதாதே!- அத்தான்!- என்னோட தெய்வமே! என் சுவாமியே!... சாகவேண்டிய என்னை உயிர் பிழைக்கப் பண்ணியதோடு நில்லாது எனக்கு ஒரு கவுரவத்தையும் மானத்தையும் வாழ்க்கையையும் அருள்பாவித்து, என்னையும் இந்தச் சமூகத்தின் வீதிகளிலே தலை நிமிர்ந்து, தலையை நிமிர்த்தி நடக்கப் பண்ணிய உங்களுடைய மகத்தான அன்புக்கு என் வரையிலும் ஒரு மகத்தான சரித்திரமே உண்டுங்க! ஆமாங்க, அத்தான்! நான் செஞ்ச மன்னிக்க முடியாத-மன்னிக்கக் கூடாத அந்த மகாப் பெரிய பாவத்துக்கு பரிகாரமாகவும் - நீங்க செஞ்ச ஈடு இணையில்லாத புண்ணியத்துக்கு ஈடாகவும் என்னோட இந்தப் பொல்லாத உயிரை உங்களோட அன்பே உருவான காலடியிலே காணிக்கை செலுத்தினால், ஒரு சமயம், என்னோட ஆவி வேகுமோ, என்னமோ?- தெரியலீங்க, அத்தான்! நான் பாவிங்க, அத்தான்!- அத்தான், நான் துரோகி! ஐயையோ. இன்றைக்கு ராத்திரிப் பொழுது எப்படித்தான் கழியப் போகுதோ?-மனசும் மனச்சாட்சியும் கிடந்து அடிச்சுக்கிட்டே கிடக்குதே?.. நான் என்ன செய்வேன்? தெய்வமே! அத்தான்... அத்தான்.. ஐயையோ, தெய்வமே!'- பாபு, எடுத்திருப்பது பரசுராமரின் அவதாரமாகவும் இருக்கலாம் அல்லவா என்பதாகக் கொஞ்சம் முந்தி அத்தான் விதியைப் போலப் பேசினாரே? ஏன் 'பாபு!--என் தெய்வமே, என் ராஜாவே! நான் மனப்பூர்வமாகத் தயாராகிடுறேன்: எனக்கு நீயே விதியாக ஆகிப்பிடு, மகனே!- ஆமாண்டா, என் தெய்வமே!'- தலை சிதறும் தேங்காயாக வெடித்துச் சுக்கல் நூறாகச் சிதறிவிடும் போலிருக்கிறது. யாரோ ஆழைக்கிறார்கள். அத்தானாக இருக்க முடியாது. 'மா!' அப்படின்னு சத்தம் கேட்ட மாதிரி இருந்தது, பாபுவாகவே

157