பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இட்டபோது, அவரது கைவிரல்கள் என்னமாய் நடுங்கின!-அன்றும் சரி, இன்றும் சரி, ரஞ்சனி மனம் திறந்து கேட்ட எதைத்தான் ரஞ்சித் மறுத்திருக்கின்றார்? நெடுமூச்சு சூறைக்காற்றாக மோதி நெளிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது; இனம் பிரித்துக் காண்பித்த வெண்ணிற முடிகள், இனம் பிரிந்துவிடாமல் பளபளக்கின்றன. நெஞ்சக் கடலில் நினைவலைகளின் ஆரவாரமே தெரியவில்லை!

குனிந்திருந்த தலையை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவளாக நிமிர்த்தினாள் ரஞ்சனி, உயிரில் நிறைந்தவரை உயிரால் நிறைத்துக் கொள்பவளாகப் பார்த்தாள். தயவுடன் தாயைப் பார்க்கும் சிறுமியின் பார்வையாக அது அமைந்திருந்தது.

பேசும் கண்களைப் பேசாமல் துடைத்து விட்டார், ரஞ்சனிக்கு உடையவர்.

பூங்காற்றுக்கு இடம், பொருள், ஏவல் என்கிற மந்திர தந்திரமெல்லாம் அத்துபடி..

வேடிக்கை பார்க்க அப்பாவும் அம்மாவும் மீண்டும் ஜோடியாகக் கிடைத்ததில், நந்தினிக் குட்டிக்குப் பரம திருப்தி!---எப்போதாகிலும் அபூர்வமாக இங்கே நந்தினி விலாசம் பங்களாவிற்கு வருகை தருகின்ற போதெல்லாம், “நந்தினிக் குட்டி!...நந்தினிக் குட்டி!” என்றேதான் வாய் கொள்ளாமலும், வாய் ஓயாமலும் அழைப்பார் மகேஷ்! இவ்வாறு அழைக்கப்படும்

போதெல்லாம், நந்தினியின் மனத்திலே இனம் விளங்காத மகிழ்ச்சிப் பாசம் பனித் தூறலாகப் பட்டுத் தெறிப்பதும் சகஜம். அது ஒரு காலம்! ஆனால், ஒரு சிதம்பர ரகசியம்!-பாபுப் பயல் சுட்டித்தனமான பாசத்தோடு, “ஏ, நத்தினிக் குட்டியே!” என்று மகேஷை நினைவு படுத்துகிற மாதிரி, ஒரு தடவை, ஒரேயொரு

14