பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“உன்னைப் பெற்ற அம்மாவைச் சோதிச்சுப் பார்க்கணும்னு உனக்குத் தோணிடுச்சா என் தெய்வமே, பாபு?”

“சும்மா ஒரு தமாஷ் பண்ணினேன்; அதுக்காக சும்மா சும்மா என்னத் தெய்வமாக ஆக்கிப்பிடுறீயே, அம்மா?”

பெற்லவளையே டெஸ்ட் பண்ணத் துணிஞ்ச மகன் தெய்வமாக இல்லாமல், வேறு யாராக இருக்க முடியும்?---நீயே சொல்லுப்பா!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள் தாய்க்காரி.

“நீ என்னென்னமோ பேசறீயே, தாயே?” நிலத்தடி நீர் மண்பரப்பில் பொங்குமே. அப்படி, பாபுவின் சிறிய கண்களில் பெரிய நீர்த்துளிகள் பொங்கின.

“சரி. சரி. அது போகட்டுய். ஒண்ணு கேட்பேன்: பதில் சொல்லுவியா, பாபு?“”

“ஓ! ஒண்ணு என்ன, ஒன்பதாவே கேளேன், அம்மா!”

“உன்கிட்டே ஒன்பது கேட்க எனக்குத் தெரியாது: ஒன்னு மட்டும் கேட்டுட்றேன், பாபு!”

“ஒ!”

வாணி ஜெயராமின் விணைக் குரல் எங்கு ஒலித்தாலும், அது தன்னை இனம் காட்டிக் கொள்ளத் தவறுவது அரிது?

இசையில் அம்மாவும் லயித்தாள்.

மகனும் மெய்ம் மறந்தான்.

“கேட்கட்டா?”

“அப்பவே ஒ சொல்லிட்டேன்!”

சிரிப்புக்கு ஒரு ரஞ்சனிதான் இருக்கமுடியும்.

159