பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இப்ப விளங்காட்டி, பின்னே எப்பத்தான் விளங்குமாம்.”

“காலம் வருறபோது எல்லாம் தன்னாலே உனக்குப் புரிஞ்சிடும்!”

“எதையும் இப்ப நீ என்கிட்டே சொல்லமாட்டே தானே!”

ரஞ்சனி தொண்டையைக் கனைத்துக் கொள்ள வேண்டியவள் ஆனாள்!

“பாபு, அம்மா பேரிலே நீ கோபப்படாதேடா, கண்ணே! நீ கோபப்பட்டால், உன் அம்மாவுக்கு இந்தப் பூலோகத்தில் வேறே போக்கிடம் உண்டா? புகலிடம்தான் ஏது. பாபு?நீ மிரண்டால் இந்தப் பங்களா நிச்சயம் தாங்காது: தாங்கவே தாங்காதப்பா! ஏன், தெரியுதா? நீ என்னோட தெய்வம்; எங்களோட தெய்வம். இல்லையா, பாபு? தெய்வம் தப்பித்தான் பிறக்கும்; அதுதான் தெய்வத்தோட விதி!-ஆமா, தெய்வத்துக்கும் விதி உண்டு. அது மாதிரி, நீயும் தப்பிப் பிறந்தவன்தான்: ஏன்னா. நீ என்னோட தெய்வம் எனக்குத் தெய்வம் நீ! ஆனபடியாலேதான், நான் என்னோட உயிரையே உங்கிட்டே பணயம் வச்சிருக்கேன்: இப்படிப்பட்ட நிலவரத்திலே, என் மனசான மனசை ஒருநாள் இல்லாட்டி ஒரு நாளைக்கு உன்கிட்டேத் திறந்து காண்பிக்காமல் தப்பி விடுவேனா?-அப்படிக் காண்பிக்கத் தவறினால், பின்னே, அந்தப் பாவத்தையும் பழியையும் சுமந்து கரைக்கிறத்துக்குப் புதுசான கங்கையைத்தான் தேடிப் போகவேணும் நான். எதுக்கும் நேரம் காலும் வரணும் அப்ப, என்னோட இந்த நெஞ்சை-நீ. சப்பிச் சப்பிப் பால் குடிச்சு லூட்டி அடிச்ச இந்த நெஞ்சை ஒரே மூச்சிலே பிளந்து உன்கிட்டே காட்டாமல் இருந்திடுவேனா? நான் உன் அன்பான அம்மா இல்லியா? இப்போதைக்குப் பெரிய மனசு பண்ணி எனக்குத் துளி

164