பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“தஞ்சாவூர்.”

“அடடே, உன் ஊர்தானா? இந்தச் சிதம்பர ரகசியத்தை அப்பவே சொல்லியிருந்தா, எனக்குத் தலைவலியாவது மிஞ்சியிருக்கும்; உனக்கும் தொண்டைத் தண்ணி வற்றி யிருக்காது. இல்லியா, அம்மா?”

“சரி, சரி. இனியாச்சும் ஆளை விடுறீயாப்பா?”

“இன்னம் ஒரேயொரு சங்கதி மிச்சம் இருக்குது, அம்மா. மகேஷ் ஸாரோட ஸ்நேகிதி ரதியோட பசியும் உனக்குத் தெரியுமோ?”

அவன் எதிர்மறையில் தலையை உலுக்குக் குலுக்கினாள்.

“ஒருவேளை, ரதியோட பசி நம்ப அப்பாவுக்குப் புரிஞ் சிருக்கலாமோ?”

“பா...பு!”

தீப்பந்தம் ஏந்தக் கூவினாள் ஏந்திழை.

புயலிடைச் சிக்கிக்கொண்ட அகல் ஆனான் பாபு; உயிர் தத்தளித்தான்; அஞ்சி ஒடுங்கியவனாக, அம்மாவை மெள்ள மெள்ள, மெல்ல மெல்லப் பரிதாபமாய்ப் பார்த்தான்: “அ...ம்... மா!”

புயல் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது.

“பாபு, நீ சின்னப் பிள்ளை!”

“ஆமா, நிஜம்தான், அம்மா. நான் சின்னப்பிள்ளை தான்; அதனாலேதான், நான் சின்னப்பிள்ளை என்கிற உண்மையை மறக்காது இருக்கேன்; நெஞ்சை ஒளிச்சு வஞ்சகம் பேச எனக்குத் தெரியாதம்மா, நீ பெற்ற பிள்ளை பொய் பேசுவேனா? அப்படிப் பொய் பேசினால்தான்,பொய் பேசின எவன் வாய்க்குப் போசனம் போட ஒப்புவியா,

166