“பின்னே என்னம்மா?- நானும் ஒரு சராசரி மனித ஜன்மமாகவே இருந்து, அதாவது, நீ பெற்ற பிள்ளையாகவே இருந்து, நீ கேட்கிற வரத்தை, நீ கேட்கிற சமயத்திலே கட்டாயம் நானும் வழங்கிடுறேன், அம்மா!என்னைப் பத்து மாசம் சுமந்து பெற்ற புண்ணியவதியான உன் மேலே ஆணை வச்சு, சத்தியம் வச்சுச் சொல்லிட்டேன், தாயே!”
பாபுவுக்கு உடல் சிலிர்த்தது.
பாபுவின் ரஞ்சனிக்கு உள்ளம் சிலிர்த்தது.
ரொம்ப ரொம்பச் சந்தோஷமாகப் போச்சு, பாபு: நீ மகா கெட்டிக்காரப் பிள்ளை; இத்தனை தெய்வாம்சம் கொண்ட உன்னை நான் என் வயித்திலே சுமக்கிறதுக்கு பாக்யம் செஞ்சிருந்த நான் உண்மையிலேயே கொடுத்து வச்சவள்தான்! நான் மறுதரமும் சொல்லுகிறேன். நீ தெய்வமாக ஆனாலும் சரி, ஆகாட்டாலும் சரி- அது உன்னோட சொந்த விவகாரம்:- ஆனா, என் வரையிலே நீ எப்பவுமே என்னேட தெய்வமேதான்! உன்னை நான் தெய்வமாகப் பாவிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம், இங்கே எனக்குக் குறுக்கே பரசுராமருக்கு என்ன வேலை?... நல்ல பொழுதாய்த்தான் விடிஞ்சிருக்குது; தொட்டதெல்லாம் தலைவலி! தொட்டதுக்கெல்லாம் தலைவலி!... நான் புறப்பட்றேன், மகனே!”
மகனது அனுமதி தாய்க்கு அவசியம் கிடையாது.
அங்கே-
பழனி மலையில் பழனி ஆண்டியின் வடிவம்: சிலை இங்கே, பாபுவுக்கும் சிலை நிலைதான்.
நந்தினி விலாசம் பெருமனையின் பெருமாட்டி ரஞ்சனியின் பார்வையில் இப்போது வழக்கம்போலே மகேஷ்-ரதி
169