பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜோடி இணையிரியாமல் காட்சியளித்ததில், அவளிடமிருந்து ஒர் ஆசுவாசப் பெருமூச்சு, புற்றைவிட்டு வெளியேறும் பூநாகமாகப் புறப்பட்டது.

அம்மாவை அழைப்பான் மகன்.

மகனை அரவணைப்பாள் அம்மா.

“அம்மா, இப்போ நான் உன் கையிலே ரெண்டு லெட்டர் கொடுக்கிறேன் ; நீ சமயம் வாய்க்கையில்,படிச்சுப் பார்!”

“ஆகட்டும்; அப்படியே செய்வேன்,’ என்று உறுதி கொடுத்து, கொடுக்கப்பட்ட கடிதங்களைப் பத்திரமாக வாங்கிக் கொண்டாள் ரஞ்சனி.

“திருப்தி தானே, பாபு”

“பரமதிருப்தி, அம்மா!”

மரங் கொத்திப் பறவையின் தலைக் கொண்டைச் சிவப்பு, முகப்பு மண்டபத்தின் வெண்ணிலவில் பாங்காகப் பிரதிபலிக்கிறது.

170