உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அந்தி நிலாச் சதுரங்கம்

8: தெய்வமாம் தெய்வம்!

தெய்வமாம், தெய்வம்...!

நல்ல வேடிக்கைதான்!

நல்ல விளையாட்டுத்தான்!

பாபுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது; அத்திரம் ஆத்திரமாக வந்தது: கோபம் கோபமாக வந்தது! "அம்மா சுத்த மோசம்!- சிருஷ்டியின் ரகசியத்தைத் துப்புக் கண்டுப்பிடிப்பதற்கு லாயக்கு இல்லாத ஒரு வாண்டுப் பயலைத் தெய்வமாக ஆகச் சொல்லுறாங்களே!-சே, தலைவலியாய்ப் போச்சுதே?- இந்த மகேஷ் எப்பத் தான் அவரோட நாட்டுக்குப் போய்த் தொலைவாரோ, தான் ஹாயாக இந்த நந்தினி விலாசத்திலே முன்னேமாதிரி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ஆடிப்பாடி விளையாடு-