பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டக்கூடிய அன்பு பிற்காலத்திலே ஒரு சரித்திரத்தைப் படைக்கக்கூடியதாகவும் அமைஞ்சிடலாமே?”

தந்தையின் அனுபவ ரீதியான பேச்சு பாபுவின் குருத்து மனத்தில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது: எதிரொலித்துக் கொண்டிருக்கிறது; மேனியின் சிலிர்ப்பு இன்னமும் அடங்கவில்லை; ஒடுங்கவில்லை; ‘அப்பான்னா, அப்பாதான்: அப்பாவேதான்!’ பெருமையான பெருமிதத்தில் மிதந்தான் மணிப்பயல், ‘எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை எனிமையால் விளங்க வச்சிட்டாங்க அப்பா!’- அவன் பெருமையும் பெருமிதமும் மேலும் ஓங்கின.

அங்கே டி. வி.யில் என்னவோ படம் நடந்து கொண்டிருந்தது.

அக்கா இனிமேல் படம் முடிந்ததும்தான், மூச்சு விடுவாள்; மூச்சுக் காட்டுவாள்!-நல்ல நந்தினி அக்கா!---நாளைக்குப் புருஷன் வீட்டுக்குப் போனால் அடுப்படியிலும் ஒரு டி. வி. பெட்டியை வாங்கி வைத்துக் கொள்வாள் போலிருக்கிறது. விதி எழுதி வைத்த மாதிரி, என் இடது கன்னத்திலேயும் மகேஷ் இடது கன்னத்திலேயும் ஒரே மாதிரியான கறுப்பு வடுக்கள் தென்படும் அதிசயக் கூத்தைப் பற்றிச் சந்தேகம் கேட்டால், என் மனசுக்குச் சமாதானம் உண்டாகிற விதத்திலே ஏதாகிலும் விளக்கமாகச் சொல்ல மாட்டாளோ?-‘அதெல்லாம் ஒண்னும் பெரிய சமாசாரம் இல்லே! நீ போய்ப் பாடத்தைப் படிடா, தம்பி!’ அப்படியென்று என்னைப் படிக்கச் சொல்லி உபதேசம் செய்து விட்டு, அவள் தன் போக்கிலே படத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டாளே?- இந்தச் சங்கதி பெரிய சங்கதியாக இருந்திருந்தால், அக்கா என்கிட்டே சொல்லாமல் இருந்திருக்கமாட்டாள்!- மருப் பிரச்னை எக்கேடு கெட்டுப் போகட்டும்! எனக்கும் மகேஷூக்கும் ஏதாகிலும் சொந்த

174