பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உன்கிட்டே திறந்து காண்பிக்காமல் தப்பிடுவேனா, என்ன? அப்படிக் காண்பிக்கத் தவறினால், பின்னே, அந்தப் பாவத்தையும் பழியையும் சுமந்து போய்க் கரைக்கிறதுக்குப் புதுசாய் ஒரு கங்கையைத் தான் தேடிப் போகவேனணும் நான். எதுக்குமே நேரம் காலம் வரவேணும்; அப்போ, என்னோட இந்த நெஞ்சை--நீ சப்பி சப்பிப் பால் குடிச்சு லூட்டி அடிச்ச இந்த நெஞ்சை ஒரே மூச்சிலே பிளந்து உன்கிட்டே காண்பிக்காமல் இருந்திடுவேனா?... நான் உன் அன்பான அம்மா இல்லையா, பாபு?...”

சிறுகச் சிறுகக் “சன்கள் நனேயத் தலைப்படுகின்றன, இளம் மார்பு ‘டக் டக்’ கென்று அடித்துக் கொள்ளத் தலைப்படுகிறது: “அம்மா என்னென்னமோ பேசிட்டீயே, அம்மா ?- ஐயையோ! வெளியே ஓடிவிடவேண்டும்;இல்லையானால், மண்டை பிளந்து விடும்! ஊகூம்!---வெளியே ஓடிவிடக்கூடாது;என் அம்மாத் தெய்வத்திடம், என் தெய்வ அம்மாவிடம் ஒடிவிட வேண்டும்!-அப்போதுதான் என் தலை தப்பமுடியும்!-நான் தப்பிப் பிழைக்கவும் முடியும்!-நான் தப்பிப் பிறந்தவன் ஆயிற்றே:- அம்மா வாய்க்கு வாய் சொல்லமாட்டார்களா?-'அம்மா! என்னோட தெய்வமே!’

“பாபு.பாபு!”

பெற்றெடுத்க - புண்ணியவதியைத் தவிர, பாபுவை இவ்வளவு பாசத்தோடும் இத்துனே பரிவோடும் இத்தகைய பதற்றத்தோடும் அழைத்திட யாரால் முடியும்?

“நான் கொஞ்சம் முன்னே, “அம்மா, அம்மான்னு: அலட்டினது எப்படிக் கேட்டிருக்கும்? அவங்க அப்ப உள்ளே அடுப்படியிலே இருந்தாங்களே?--சின்னப் பிள்ளைக்குப் பெரிய ஐயம் புறப்பட்டது.

அதே சடுதியில்:

176