பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்திருந்தாற்போன்று, பாபுவுக்கு ஒரு சந்தேகம் கண்சிமிட்டியது. 'சற்றுமுந்தி நான் மாடியிலேயும் கீழேயும் அப்பாவோட அந்தரங்க அறையையும் அம்மாவுக்குச் சொந்தமான கூடத்தையும் ஒரு அலசு அலசினதை இவங்க ரெண்டுபேரும் உளவு அறிஞ்சுதான் வழக்கப்படி என்னைக் கண்டிக்க இப்படி இழுத்துக்கிட்டுப் போறாங்களோ? சின்னப்பிள்ளையின் சின்னமனம் வேண்டாத ஆராய்ச்சியில் வேண்டாவெறுப்புடன் பின்னிக்கிடந்த சூட்டோடு சூடாக, ஒட்டமும் நடையுமாகப் பாய்ந்து சென்ற பெற்றாேர்களோடு உடன் தொடர்ந்து, நின்று நிலைத்த இடத்தை ஏறிட்டுப் பார்த்தபோது, அவன் கண்களில் அடுத்த முறையாகவும் அந்தப் பரசுராமர் ஆட்டகாசமான அமர்த்தலோடு காட்சியளித்தார்!

“எனக்குப் பரசுராமர் அவதாரம்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும், அம்மா! அவன் தன்னையும் அறியாமல் தன்னுடைய இடது கன்னத்தின் வடுவைத் தடவி பார்த்துவிட்டு, பிறகு, தனது இடது பக்கத்து இருதயத் திற்குத் தடவிக் கொடுக்கவும் ஆரம்பித்தான். வடுவின் நினைவு அவனே மகேஷை நினைவுகூரச் செய்யவும், மறக்கவில்லை!- "மகேஷ், நீ யார்?”

என்னவோ, முகப்பில் சத்தம் கேட்டாற்போல இருந்தது.

திரையை நீக்கியும் பார்வையை நீவியும் பார்த்தான் பாபு. நான் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, தோழன் அசோகன் ஹாஸ்டலிலிருந்து என்னு டைய பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு ராத்திரியே இங்கு வந்து சேர்ந்தால் தேவலாம்!

"பாபு!" அழைத்தாள் அம்மா. கொஞ்சப் பொழுதுக்கு முன்னதாக, எனக்குப் பரசுராமர் அவதாரம்னதான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!” என பாபு. கருத்துத் தெரி-

178