பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்தது அவளிடம் மனக்குகை ஓவியமென நின்றது: நிலைத்தது. ‘அதிசயப் பிறவியான, அன்புமிக்க என்ளுேட தெய்வமான பாபு, கிருஷ்ணன், முருகன்னு ஏதோ ஒரு அவதாரம் எடுக்காமல், யாரோ ஒரு முனிவரோட கடைசி மகனான அதிசயப்பிறவியான பரசுராமர் அவதாரத்தை எடுப்பாளுமே?-முன்னேவிட அதிகப்படியான வலியும் வேதனையும் தற்போது அவளது முதுகுப்புறத்திலிருந்து வெளிக்கிளம்பிற்று. இவ்விதமான நினைவுச் சருகுகள், அவளுடைய மனச்சாட்சியின் தீச்சுடரில் வெந்து சாம்பலாகக் காத்திருந்தனவோ, என்னவோ?

"பாபு, நீ உன் அம்மா கையிலே கொடுத்த ரெண்டு லெட்டரையும் வாங்கிக்க: இந்தா!" .

மின்விளக்குகள் ‘சடக்' கென்று நின்றன: நின்ற சுவடு காட்டாமல், ‘சடக்' கென்று எரியவும் செய்தன.

நையாண்டித்தனமான சாகசமும், குறும்புத்தனமான சூட்சுமமும் விழிகளில் விதியாகச் சிரிக்கக் கடிதங்களை வாங்கிக்கொண்டான் பாபு. முனைப்பான யோசனையில் முனைந்தவளுக, பொல்லாத திவினையாகப் பளிச்சிட்ட அந்தக் கன்னங் கறுத்து மருவை-வடுவைச் சீற்றமும் வேதனையும் தாங்காமல் தடவிக்கொண்டே யிருந்தான். “இந்த வடுப் பிரச்னையை, ஆதாகப்பட்டது. எனக்கும் மகேஷுக்கும் ஒரே மாதிரியாக இடது கன்னத்திலே அநாகரிககாக மரு விழுந்திருக்கிற சிருஷ்டி ரகசியம் பத்தின பிரச்னையை இந்த நல்ல சந்தர்ப்பத்திலே அப்பாகிட்டேயும் அம்மாகிட்டேயும் கேட்டா, என்னவாம்?-எண்ணத்தைச் செயலாற்ற எண்ணியவனின் இதயத்தின் இதயத்தில் ஆம்மா பேசிய பேச்செல்லாம் எதிரொலிக்கவே, ஓர் அரைக்கணம் தடுமாறி, மறு அரைக்கணத்தில் சுய உணர்வை மீட்டுக்கொண்டு, பிரச்னையைப் பெற்றவர்களின் சந்நிதியில் முன்னே வைக்க வாயைத் திறந்தனார் பாபு.

179