பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நான் மகாபாவி!... மன்னிக்க முடியாத பாவி நான் மன்னிக்கக் கூடாத துரோகி நான்!... ஐயையோ, அந்தச் சோதனை ஏன் ஏற்பட்டுத் தொலைச்சுது?...ஈஸ்வரா!’

நெஞ்சின் வலி மிஞ்சுகிறது.

மின்காற்று இதம்பதமாக வீசும்,

அந்தச் சடுதியிலும்கூட,ரஞ்சனி அந்த விதிக் கூத்தை-வினைக்கூத்தைத் திரும்பிப் பார்க்கிறாள்; பார்க்க வேண்டியவள் ஆகிறாள்:- விதி ஆடத் தொடங்கிய அந்தி மாலைச் சதுரங்க ஆட்டம், விதியின் எழுத்தைக் கிழித்து வீசியதைப் போன்று ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, மோற்கொண்ட புரட்சிச் சவாலின் தார் மிகமான புனித முடிவின் பேரில் தொடர்ந்து பிறகு, அது அந்தி நிலாச் சதுரங்க ஆட்டமாக உருக் கொண்டு, அந்த ஆட்டமும் அந்த விளையாட்டும் கடைசியில் விதிக்குத் தோல்வியை ஏற்படுத்திக் கொடுக்க நேர்ந்த ஆந்தச் சித்திர-விசித்திர நிகழ்ச்சி, இப்போதும் அவள் ரத்தத்தை உறையச் செய்யத் தவறி விடவில்லைதான்: "ஐயையோ!’ - தன் மார்பகத்தை- அன்பு அத்தான் ரஞ்சித்தும் அருமை மகன் பாபுவும் ஆசை தீர விளையாடிய தன் மார்பகத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

அப்படியென்றால், சோதனையின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து முடிவை வெளியிடுகின்ற ஒரு சதுரங்க ஆட்டம் தான் இந்த உலக வாழ்க்கையா?

இன்றைக்குக் கபாலம் கட்டாயம் வெடித்துச் சிதறி விடும்!...பேஷாக வெடிக்கட்டும்; சிதறட்டும்!

அத்தான் மறுபடி சிரிக்கிறார்: அவருக்கு மட்டிலும் உரியதான அளப்பரிய அன்புடன் சிரிக்கிறார்.

ரஞ்சனி கதறுகிறாள்: அத்தான், என் சுவாமியே! சாக வேண்டிய என்னை உயிர் பிழைக்கப் பண்ணியதோடு

182