பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நில்லாது. எனக்கும் ஒரு கெளரவத்தையும் மானத்தையும் வாழ்க்கையையும் அருள்பாவித்து, என்னேயும் இந்தச் சமுதாயத்தின் வீதிகளிலே தலை நிமிரிந்து, தலையை திமிர்த்தி நடக்கப் பண்னின உங்களோட. மகத்தான அன்புக்கு என் வரையிலும் ஒரு மகத்தான சரித்திரமே உண்டுங்க!. ஆமாங்க, அத்தான் :- நான் செஞ்ச மன்னிக்க முடியாத மன்னிக்கக் கூடாத அந்த மகாப் பெரிய பாவத்துககுப் பரிகாரமாகவும்-நீங்க செஞ்ச ஈடு எடுப்பில்லாத மகாப் பெரிய புண்ணியத்துககு நன்றிக் கடளுகவும் என்ளுேட இந்தப் பாழும் உயிரை உங்களோட அன்பே வடிவான காலடியிலே காணிககை செலுத்தினல்தான், என்னோட ஆவி வேகுமோ, என்னமோ?-புலம்பல் நிற்கக் காணுேம்! தன் முதற்காதல் தோற்ற விரக்தியில் செத்து மடியவிருந்த தன் உயிரைக காத்து, மானத்தையும் காத்து, தனக்கும் ஒரு வாழ்வை அளிகக அன்போடு முன் வந்து, தன் இழுத்தில் தாலி கட்டிய அத்தான். அப்போதும் வழக்கம் போல நெஞ்செங்கும் நீக்கமற நிறைந்திருக்கக் கண்டாள் அவள்-அத்தான், என் சுவாமியே! இந்தப் பாவியை ரட்சிக்கச் சிலுவையை ஏந்தி. அன்பின் அவதாரம் எடுத்திருககிற என்னோட கர்த்தரே!... -

பாதங்களும் தனகின்றன.

பாவமன்னிப்பில், வாழ்க்கை சீரடைந்துவிடாதா?.

"தெய்வமே"!

பாபு ஓடோடி வந்து, அன்னையின் நெஞ்சகத்திலே "தொபுகடீர்” என்று குதித்தான். பாபு தெய்வமேதான்!.. பழநி ஆண்டித் தெய்வமேதான்!

எதை நினைப்பாள் ரஞ்சனி?

ரஞ்சனி எதைத்தான் மறப்பாள்?

183