பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்று:

“என் பிரியமான பாபு!
நீ இல்லாமல் நான் இல்லை!...ஆகவே, நீ என்னோடு கொச்சிக்கு வந்து விடுவாயா? ஏன், தெரியுமோ?

நீ இல்லாமல், நான் இல்லை!...

பிரியமான,
மகேஷ்!”

இரண்டு::

மகேஷ் ஸாரே!
நீங்கள் இல்லாமல் நான் இருப்பேன்.

ஆகவே, நீங்கள் உடனே இங்கிருந்து புறப்படவும்.

பிரியமில்லாத,
ர. பாபு!”

மஹாவிஷ்ணுவின் கைச் சக்கரத்தை நயந்து பெற்று, அதைத் தன் காலில் கட்டிக் கொண்ட பாவனையில்தான் பாபு ஒரிடத்தில் நிற்காமல் நிலைக்காமல் சதா சுற்றிக் கொண்டே இருப்பான். பாபுவுக்கு எப்போதும் அவசரம்; எதிலும் அவசரம்!:-மேலும். இது அவசரயுகம், பாருங்கள்! "அப்பா, அம்மா! மதியம் விருந்து முடிஞ்ச நேரத்திலே நம்ம வீட்டுப் பேஸினுக்குக் கீழே கிடந்த மகேஷோட லெட்டரையும் அதாவது, அந்த மகானுபாவர் எனக்கு வரைஞ்ச இந்த லெட்டரையும், இதுக்கு உண்டான என் பதில் கடிதத்தையும் இப்பவே அவர் கையிலே

188