பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் மீண்டும் சலனம் அடைய நேரிட்டது. கண்ணீர்த் துளிகள் அவரைக் காட்டிக் கொடுத்து விடுவதாகப் பயங்காட்டின. சுதாரித்துக் கொண்டார்; அவருடைய நயமான சமர்த்து யாருக்கு வரும்? கண்ணீரை நாகரிகமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளவும் செய்தார். பேஷ்! ரஞ்சனி கவனித்திருக்க மாட்டாள்!- “ரஞ்!”

ரஞ்சனியின் விழிகள் சலனத்தைக் கடந்து இப்பொழுது கம்பீரமாகவே உயர்ந்தன.

ரஞ்சனியின் ரஞ்சித்துக்கு இப்போது தான் நல்ல மூச்சுத் திரும்பியிருக்க வேண்டும்.

“கூப்பிட்டீங்களே?”

“ஆமாம்.”

“சொல்லுங்களேன்.”

“ஊம்!”

“புதுசாஏதாச்சும் சொல்லப்போறீங்களா, அத்தான்?”

கண்களை உயர்த்தியபடி, “ஆமாம்” என்றார் ரஞ்சித் , “ரஞ்சனி, கொஞ்சம் முந்தி, மிஸ்டர் மகேஷ் டெலிஃபோன்லே உன்னை ரொம்பவும் விசாரிச்சாராக்கும்!” என்று தொடர்ந்த அன்புடன் தொடர்ந்தார். அமைதி கனிந்த மனேவியின் அழகான கண்கள் அவளையும் அறியாமலோ, அல்லது, அவளையும் மீறிய விதத்திலோ, மின் அதிர்ச்சி அடைந்து, சலனமும் அடைந்து, மீண்டும் தாழ்ந்து விட்ட துர்ப்பாக்கியத்தை அவர் நுட்பமாகவும் கவனமாகவும் கண்டு உணர்ந்த மாத்திரத்தில், அவரது மனிதாபிமான உணர்ச்சிகளிலே ரத்தம் கசியத் தொடங்கியது. நெஞ்சு வலிக்கு நேரம், காலம் தெரியும். வலிக்கட்டுமே?---‘டொலாஜின்’ மாத்திரை இருக்கவே இருக்கிறது, “ரஞ்!...” ஒரு சுண்டு சுண்டி விட்டுப் பேசலானார்: “நம்ம மகேஷ்

17