பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

*நீங்களா?” மிகப் புதிதான வெட்கத்துடன் விழிகன் இறக்குகிறாள் ரஞ்சனி.

மெளனம்,

“ஆச்சரியமாயிருக்கே உங்க பேச்சு? திருநீலகண்டரோட வைராக்கிய நோன்பு பத்து வருஷம் கழிச்சு இப்பத்தான் பூர்த்தி ஆகிறதுக்கு வேளை பார்த்திருக்குப் போலே!”

‘எதுக்கும் வேளை கூடிவர வேணாமா, ரஞ்சனி’

காற்றில் சிக்கி அணயத்துடிக்கும் விளக்கு தப்பி விடும் போது, விளக்கின் ஒளி பிரகாசமாகவே அமைவதற்குசி சரியாக, ரஞ்சினியின் சோகம் சூழ்ந்த வதனம் பளிச் சென்று மலர்ச்சியை அடைந்திட, ‘அப்படீங்களா? சரி, சரி: விருந்துமுடிஞ்சானதும், பத்து வருஷம் கழிச்சுத் திறக்கப் போற நம்மோட பள்ளி அறையிலே நீங்க எனக்குத் தடவிக் கொடுங்க, போதும்; இப்ப வேனாங்க; உடம்பை என்னமோ செய்யுதங்க, அத்தான். நான் போறேனுங்க!” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் தலைவி.

பதற்றம் மேலிட, ‘போட்டுவாரேன்னு சொல்லேன், ரஞ்!” என்று கேட்டுக் கொண்டார் தலைவர்.

அழகான மூரல் சிந்துகிறாள் பேரழகி: "ஊம்... போயிட்டு வாரேனுங்க, அத்தான்!"

“ஆமா. உடம்பை என்ன செய்யுதாம்!”

"என்னமோ செய்யுதுங்க!”

"உன்னைப் பார்த்தால், என்னமோ எனக்குப் பயமாய் இருக்குது. அசந்தும் மறந்தும்கூட மூணுவது தடவையாகவும் செத்து மடிஞ்சிட பிரயத்தனம் செஞ்சிடாதே, ரஞ், என்ன, சரிதானே?" தரும தேவதையின் முகத்தை நிமிர்த்திக் கெஞ்சினார் தருமப்பிரபு.

190