பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவர் மறந்துவிடாமல், சாப்பாட்டுக்குத் திரும்பினார்:விருத்தினர்களை மதிக்கவேண்டும்!

மகேஷ் பெரிதாகவே ஏப்பம் விட்டா. ,

ரஞ்சனி மட்டிலும் மகேஷ-க்குச் சளைத்து விடுபவளா?

ரஞ்சித் அனுசரணையாக ரசித்து, அமரிக்களமாகச் சிரித்தார்.

மகேஷ் கைகழுவி முகம் துடைத்தார்.

பாம்பைக் கண்டு பயந்து ஒதுங்கின பாவனையில், மகேஷை விலக்கி வைத்து நடந்தான் பாபு.

மகேஷை உற்றுப் பார்த்தான் அசோகன். பாபுவிடம் மெதுவான குரலில், "டேய்! இந்த ஆள்தானே உன் அப்பா?" என்று விசாரனை செய்வான்.

நாவினால் சுட்ட சொல்லத் தாங்கும் இதயம் பாபுவுக்கு இல்லை; துணுக்குற்றான் துடிதுடித்தான். *ஏண்டா அப்படிக் கேட்டே?” என்று ஆத்திரம் புழுதி எழுப்பக் கோபாவேசமாகக் கேட்டான் பாபு.

“உனக்கு இருக்கிறதாட்டமே அந்த ஆளுக்கும் மூஞ்சி கயிலே கறுப்பான மறு இருக்குதே, அதை வச்சுக் கேட்டேன். இப்படிப்பட்ட அதிசயமான ஒற்றுமை, அப்பா-பிள்ளைக் குத்தான் வாய்க்கும்னு சொல்லி விக்கிடுவாங்க! . . ஆதான் கேட்டேன்!"

"போடா, போடா, முட்டாள் ராஜா! அந்த ஆள் யாரோ? அவர் எங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்: மலையாள நாட்டிலே கொச்சிலே இருக்கார் வந்த உனக்கு தானும் என் தாயார் தகப்பளுரைக் காண்பிக்கல்லே, நீயும் கேட்டுக்கிடல்லே!- சரி. தொலையட்டும். அங்கே பார், யாதொரு விஷமோ விஷமமோ இல்லாம அன்பு