பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்றேன்: நானும் தேஷாம் உயிருக்குயிராய் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்சோம்; ஆனா, எங்க முதல் காதல் நிறை வேறல்லே அந்த ஏக்கத்திலே, நான் செத்துப்போயிடப் பிரயத்தனப்பட்டப்பு. இவர்-என் அன்பு அத்தான் என்னைக் காப்பாற்றி. என் கழுத்திலே மஞ்சள் தாவியையும் கட்டி இங்க: எங்களேத் தேடிச் சீதேவி வந்தா; எங்க நந்தினி பிறந்தாள் :- அப்பறம்...அப்பறம், ஒரு சமயம் சாகப் பிழைக்கக் கிடந்தேன்: டாக்டருங்களெல்லாம் என்னைக் கைவிடப்பட்ட நெருக்கடியான அந்தச் சோதனை நேரத்திலே, இந்தப் பாவியாலே என்னோட முதல்காதலேக் கைவிடமுடியல்லே, மகேஷைக் கடைசியாக ஒரு தரம் பார்த்திடவேணும்னு ஆசைப்பட்டேன்; என் அத்தான் கிட்டே சொன்னேன்; மகேஷ் ஒரு அந்திப்பொழுதிலே வந்து சேர்ந்தார்; அப்போ, விதி இப்படியான சதுரங்க விளையாட்டை ஆடிப்பிடும்னு நாளுே, இல்லே, மகேஷோ கடவுள் சத்தியமாய் நினைக்கவே கிடையாது: மகேஷைக் கண்டடியும், எனக்குப் புது உயிர் வந்திட்டமாதிரி இருந் ‘திச்சு; நாங்க ரெண்டுபேரும் என் அத்தான் ஒப்புதலோடே, மாடியிலே தனி அறையிலே பேசிக்கிட்டிருந்தோம்; எங்களே யும் மீறி, எங்களையும் அறியாமல், நாங்க...நாங்க... ஐயையோ...’ ரஞ்சனிக்குத் தொண்டையை அடைத்தது.

“ஐயையோ, அம்மா!" மறுபடியும் பாபு தன் மண்டையைப் பிய்த்துக்கொண்டான்: தன்னுடைய அழகான இடது கன்னத்திற்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொண்டிருந்த அந்தக் கறுப்பு நிற மறுவை-தழும்பு மக்சத்தை வடுவைப் பிய்த்தெறியமுற்பட்டவனைப்போலவே, அந்தத் தோல்பகுதியைச் சுரண்டிவிடத் தொடங்கினான்.

"பாபு!"

இப்போது ரஞ்சித்தின் அன்புப்பிடிக்குள் சிக்கிக் கொண்டான் பாபு!...

200