பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் பேசலானார்: “பாபு: உன் அம்மா-என் மனைவி ரஞ்சனி, தான் செஞ்சிட்ட மன்னிக்கமுடியாத-மன்னிக்கக் கூடாத அந்தப் பாவத்துக்கு ஈடுசெஞ்சிட, மறுமுறையும் செத்துப்போயிடத் துணிஞ்சிட்டா; அப்போதும் நான்தான் அவளைத் தடுத்தேன். ஏன், தெரியுமாப்பா?-நான் வள்ளுவத்தை நம்புகிறவன்; என்னோட உயிரை நான் காப்பாற்றாமல் இருக்கமுடியுமா?-அன்பு இல்லாமல், வெறும் எலும்பைத் தோலினலே போர்த்திக்கிட்ட வெறும் உடம்போடே நான் நடமாட ஒப்பல்லேப்பா!- எனக்கு வள்ளுவருக்கு அடுத்தபடியான ஆசான் மகாத்மா!--நீதி, நியாயங்களை எதிர்பாராமல், நான் அன்பின் சட்டத்தின் பாதங்களிலே அன்போடவும், இரக்கத்தோடவும் மனிதாபிமானத்தோடவும் சரண் அடைஞ்சேன்!---என் ஆருயிர் ரஞ்சனியின் பாவத்துக்குப் பாவ மன்னிப்புக் கொடுக்கவும் முன்வந்தேன்!...நீ உருவான அந்த முதல்காதலின் சின்னமான கருவைக் கட்டிக் காப்பாற்றிடவும் துணிஞ்சேன்!-அந்தி மாலையிலே விதி ஆடத் தொடங்கின சதுரங்க விளையாட்டு நல்லபடியாகவே-என் விதிப்பிரகாரமே நல்லபடியாகவே முடிஞ்ச நேரத்திலே, அந்திநிலா உதயமாகிடுச்சு, பாபு! -ஆனா, பத்து வருஷத்திலே இந்த ரகசியத்தை நாங்களே உன்கிட்ட சொல்லிப்பிடத்தான் நித்த நித்தம் தவிச்சோம் ஆனா, அந்தப் பாழும் விதி, இந்தக் கருப்பு மரு-வடுமூலம் இப்பத்தான் அந்த ரகசியத்தை உடைச்செறிய வேளை பார்த்திருக்குது!...பாபு: பாபு!... என்னோட அன்பான ஆருயிர் ரஞ்சனி-உன்னோட அன்பான தாய் ரஞ்சனி, என் வரைக்கும். எப்போதுமே தீக்குளித்த சீதாப்பிராட்டியே தான்! ஆமாப்பா, பாபு!...ஆமாம்!’ கட்டுமீறிய உணர்ச்சிகளால் கட்டுண்டிருந்த பாங்கர் ரஞ்சித், சின்னப்பிள்ளை மாதிரி விம்மிக்கொண்டேயிருக்கிறார்!

பாபு இப்போது பழனிமலை ஆண்டியாகக் கல்லாய்ச் சமைந்தான்; மறு இமைப்பில், தாயிடம் ஓடி, அவள்

201