பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கைப்பற்றியிருந்த அந்த நச்சுக் கோப்பையை வல்லமையோடு பறித்துப் பருகத் தொடங்கினான்.

“ஐயையோ, பாபு!... பரசுராமராக மாறத் தவறிட்ட நீ. இனிமேல் தெய்வமாகவும் மாறவேண்டாம், அப்பனே பாபு! என் அப்பனே பாபு...!”

பாபு சிரிக்கிறான்: “இப்பத்தான் எனக்கு நல்ல ஞாபகம் வருது! தாயே! நீங்க இந்தக் காப்பியிலே கலந்தது விஷப்பொடி இல்லே!-அந்த விஷத்தூளை நீங்க எடுத்து வச்சப்ப, நான் துப்பறிஞ்சு, மேஜைக்கு அடியிலே ஒளிஞ்சிருந்து, அதை மாற்றிப்பிட்டேன், அம்மா...!”

“பாபு!” கதறிணாஆள் ரஞ்சனி.

பாபு அன்னையின் அன்புமிகுந்த அணைப்பில் கதறுகிறான்.

“அம்மா, நான் அவமானச் சின்னமா. தாயே?...” என்று உயிர் ஒடுங்க, உள்ளம் ஒடுங்கக் கேட்டான்; கதறினான்; புலம்பினான் பாபு!

ரஞ்சனியின் அன்பான மார்பகம் கதறியது; அலறியது; கசிந்தது; வழிந்தது;

“பாபு, என் மகனே! நீ அவமானச் சின்னம் இல்லேப்பா!-இல்லவே இல்லே, பாபு!... நீ என்னோட புனிதமான பாசத்தின் அன்புச் சின்னம்!... இந்தப் பாவியை ரட்சித்துச் சிலுவை சுமந்த என் ஏசுநாதரான அன்பு அத்தானோட விலைமதிக்க முடியாத தெய்வீகமான தியாகத்துக்கு வாய்ச்சிட்ட அன்போட அடையாளம் நீ, பாபு!...”

“தாயே, என் தெய்வமே! நீ பெற்றெடுத்த பாபுவாகவே நான் இனி இருந்திடுறேன், அம்மா...!”

“பாபு!”-ரஞ்சனி விம்மினாள்.

ரஞ்சித் அலறினார்: “பாபு...! பாபு!”

202