பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்திகள் காற்றில் பறக்கலாம்; செய்தித்தாள் காற்றில் பறக்கலாமா?

கிடைத்ததை எடுத்துப் பத்திரிகையின் தலையிலே போட்டார் ரஞ்சித்; போட்டது, ரஞ்சனிக்குச் சொந்தமான சிகப்புடைரி என்ற துப்பு அப்புறம்தான் அவருக்குத் தெரிந்தது. ‘நெற்றிக் கண்ணைத் திறந்து விடாதே, தாயே!’ என்று பச்சைப் பிள்ளை மாதிரி கண்களால் கெஞ்சினார்.

‘ஓ.கே!’ கிடைத்தது.

“ரஞ், நம்ப மகேஷ் போன தடவை. இங்கே எப்போது வந்தார்னு நினைப்பு இருக்குதா?”

“ஏன், உங்களுக்கு நினைப்பு இல்லையா, என்ன?”

“எனக்கு இருக்கு!”

“என்ன இருக்கு உங்களுக்கு?”

“நினைப்பு.”

“பின்னே, என்னவாம்?”

“பின்னே, ஒண்ணுமில்லே; சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்; ப்ளீஸ்...சொல்லேன், ரஞ்!”

“ஒஹோ!...” என்று அழகு காட்டினாள்; அழகு கூட்டினுள் ரஞ்சனி. காற்றில் தவழ்ந்து வந்த பவளமல்லிப் பூக்களின் சுகந்தத்தை அவளும் அனுபவிக்கத் தப்பவில்லை. இந்தப் பொங்கலுக்குத்தான் வந்து சேர்த்தது. ரூபியா வாய்ல்! அதற்குள் குறும்பு வந்துவிட்டது: சரிந்து நழுவத் துடித்தது. ரஞ்சனியிடமா ஜம்பம் சாயும்?-இப்போது: “கப்சிப்!”-“அத்தான்” என்று நினைவுக் குரல் கொடுத்தாள். பிறகு, “நீங்க அநேகமா இங்கே மெட்ராஸிலேயேதான் இருந்துகிட்டு இருப்பீங்கண்ணு நம்புகிறேன்”, என்று ‘டக்’கென்று சொல்லி,

20