பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘டக்’கென்று நிறுத்திவிட்டு, மறுபடி தொடரலானாள்; “மிஸ்டர் மகேஷ் முந்தின தடவை இதே ஜனவரியிலே கொஞ்சம் முன்னதாக, அதாவது, தைப் பொங்கல் போகிப் பண்டிகைச் சமயத்திலே இங்கே வந்திருந்தார். சரிதானே, அத்தான்?” என்று கேட்டாள்.

“ரஞ், நீ சொல்வது சரியில்லாமல் இருக்குமா?”

“அத்தான், உங்களை எனக்குத் தெரியாதாக்கும்!”

“ரஞ்...!”

“....”

மெளனத்தில் மெளனம் சிரிக்கிறது.

“சாதாரணமாகத்தான் சொன்னேனுங்க, அத்தான். அப்புறம், என்னாங்க விசேஷம், அத்தான்?” என்று புதிய பேச்சுக்கு அவரைத் துாண்டினாள் தலைவி.

“ஓ!-என்னை உனக்குத் தெரியாதா, என்ன? பேஷாகத் தெரியும்!-அது போகட்டும். ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளாய், அத்தி பூத்த மாதிரி, இங்கே, பட்டணத்துக்கு வந்திருக்கிற நம்ப குடும்ப நண்பர் மகேஷ் இந்தத் தடவையும் நம்ம பங்களாவிலே ஒரு ராத்திரியாகிலும் டின்னர் சாப்பிடாமல் திரும்பமாட்டார்னு நான் நினைக்கிறேன்; நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார், ரஞ்சனிக்கு உடையவர்.

மனத்தின் உள் வட்டத்தில் சுழித்த அதிர்ச்சி, முகத்தின் வெளிவட்டத்திலும் சுழிக்க, கன்னங்களிலும் தாழ்வாயிலுமாக வேர்வை தெறித்தது. இமைகளின் விளிம்புகளை மோதிர விரல் நீவி விட்டது. என்னவெல்லாமோ கேள்வி கேட்கிறாரே அத்தான்காரர்?-“நீங்க என்ன

அ-2

21